கடும் மழையினால் சாபாவில் வெள்ளம்

 

sabah rainதீவகற்ப மலேசியாவில் வெள்ள நிலைமையில் சற்று முன்னேறம் ஏற்பட்டிருக்கையில், சாபாவில் பெய்த கடும் மழையினால் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தாவவ் மற்றும் கோத்தா பெலுட் ஆகியவை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. உயர் அளவிலான வெள்ளப் பெருக்கால் சாலைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கின்றன.

வெள்ளப் பெருக்கால் தாவவ், பாலுங்கிலுள்ள சாலை ஒன்று மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை படங்கள் காட்டுகின்றன.

சுங்கை லெபாக் மொயோ ஆற்றின் கரைகள் உடைந்து போனதைத் தொடர்ந்து ஐந்து கிராமங்களில் வெள்ளம் அதிகரித்திருப்பதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.