சீசர் அல்லது ரோம், இரண்டில் ஒன்றை அம்னோ தேர்வு செய்ய வேண்டும்

najib golf with obamaரோம் வேண்டுமா அல்லது சீசர் வேண்டுமா என்று ரோமர்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்ததைச் சுட்டிக் காட்டிய மூத்த செயதியாளர் காடிர் ஜாசின், அம்னோவும் பாரிசானும் அதே போன்ற சூழ்நிலையில் தற்போது இருப்பதாகக் கூறினார்.

நஜிப் வேண்டுமென்றால், அடுத்தப் பொதுத் தேர்தல் புத்ராஜெயாவை இழக்க வேண்டும். இதில் எது வேண்டும் என்பதை அம்னோவும் பாரிசானும் தேர்வு செய்ய வேண்டும் அவர் பகிரங்கமாக கூறினார்.

“இறுதியில் அம்னோவுக்கும் பாரிசானுக்கும் ஒரு மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். அது நடக்கவில்லை என்றால், நிலைமை மோசமாகிவிடும் என்பதோடு இப்பெரும் கூட்டணி ஆற்றல் இழந்து வயோதிகத்திடம் சரணடையக்கூடும்”, என்றாரவர்.

நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் குழுமத்தின் முன்னாள் முதன்மை ஆசிரியரான காடி ஜாசின் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் குரல் என்று கருதப்படுபவர். இவரது இந்த மிக அண்மைய இணையதள பதிவேற்றம் ஆட்சியில் இருப்பவருக்கு எதிராகப் புரட்சி செய்வதற்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பாகும்.

அம்னோவும் பாரிசானும் அவற்றின் உணர்சிகளையும் நோக்கங்களையும் இழக்காதிருந்தால், அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

“அவர்கள் நடிக்கலாம். தொடர்ந்து எல்லாவற்றையும் மறுக்கும் நிலைப்பாட்டில் இருக்கலாம். ஆனால், அவர்களின் செயல்பாடுகள் மற்றும் Rome or Ceasarமக்களிடம் அவர் காட்டிய நேசம் பற்றிய அவர்களது கடந்த சில ஆண்டுகாள பதிவுகள் அவர்கள் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதைக் காட்டுகிறது என்று காடிர் மேலும் கூறினார்.

“இதனைக் கூற நான் வருத்தப்படுகிறேன். அம்னோவும் பாரிசானும் பிரதமரை வைத்துக்கொள்ளலாம். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று நடிக்கலாம். ஆனால், அடுத்தப் பொதுத் தேர்தலில் அவர்கள் தூக்கி எறியப்படும் அபாயகரமான நிலை அளவற்றது என்ற உண்மையை அவர்கள் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

கோல்ப் ராஜதந்திரமா?

வெள்ளப் பேரிடர் நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கையில் ஹவாயில் கோல்ப் விளையாடிய நஜிப் பற்றி கூறிய அவர், “கோல்ப் ராஜதந்திரம்” அந்த கோல்ப் விளையாட்டை தள்ளிப்போடுமாறு கேட்டுக் கொண்டால், அமெரிக்க அதிபர் ஒபாமா ஒத்துக்கொள்ள மாட்டாரா என்று கடிர் வினவினார்.

பக்கத்தான் ரக்யாட் அதிகப்படியாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்த அந்த மூத்த செய்தியாளர், அவர்கள் தங்களுக்கிடையிலான சண்டை சச்சரவுகளுக்கு முடிவு கட்டி விட்டு செயல்பட்டால் அவர்கள் பெற்ற 52 விழுக்காடு மக்கள் ஆதரவு வாக்குகளை நிலைநிறுத்திக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இருக்கிறது. மேலும், எதிர்வரும் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெறக்கூடும் என்றார்.