முன்னாள் செனட்டரும் ஹிண்ட்ராப்பின் தலைவருமான பி.வேதமூர்த்தி சரவாக்கில் ஒரு கருத்தரங்கில் தேச நிந்தனைச் சட்டம் குறித்து உரையாற்றுவதற்கு இன்று காலை கூச்சிங் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
ஆனால், அவர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அத்துறையின் மூத்த அதிகாரி வேதமூர்த்தி சரவாக்கில் நுழைவதற்கு சரவாக் மாநில முதலமைச்சர் அலுவலகம் தடை விதித்திருப்பதாக அவரிடம் தெரிவித்தார் என்று ஹிண்ட்ராப் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
ஆனால், அவரது வருகைக்காக கூச்சிங் விமான நிலையத்தில் காத்திருந்த ஆதரவாளர்களை சிறிது நேரம் சந்திப்பதற்கு வேதமூர்த்தி அனுமதிக்கப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறிற்று.
அவன்களுக்கு பயம் கவ்விக்கொண்டது !!!!!!!!!!!!!!!!
மக்களிடம் பேசுவதற்கு தகுதி பெற்ற ஒரே அரசியல் கட்சி அம்னோ மட்டுமே. மக்களை முட்டாளாக்கி நாட்டை ஆள அம்னோ கையாளும் ஒரு தந்திரம். மக்களுக்கு உதவி தொகை ( பிரிம்) கொடுத்து கௌரவ பிச்சைக்காரர்களாக மாற்றிய நாஜிப் அவர்கள் மாகாதீரரையும் மிஞ்சி விட்டார். ஒற்றுமையாக இருந்த நான்கு எருமைகளை பிரித்து வேட்டையாடிய சிங்கமும் எருதுகளும் முதல் வகுப்புக் கதை ஞாபகத்திற்கு எட்டுகிறது. இண்டிராப் மூலம் ஒற்றுமை பட்ட இந்தியர்களை கூறு போட்டவர் நஜிப்.- மானியங்கள் மூலமாக.
எங்கேயும் ஊழல்வாதிகளின் ஆட்சி – வேறு என்ன நடக்கும்?
ஒரு மலேசியன் மற்ற மாநிலங்களுக்கு போவதை எப்படி தடுக்கமுடியும் . இது எந்த சட்டத்தில் உள்ளது.சிறுபிள்ளைதனமான அரசியல் .