அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனிக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சூதாட்ட பெரும்புள்ளி பால் புவா அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு மலேசிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பாக்கார் ஆலோசனை கூறியுள்ளார்.
அனைத்துலக குண்டர் கும்பலின் உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்படும் இந்த மலேசியர் பற்றிய மலேசிய போலீசாரின் அறிக்கையில் போலீசார் தவறு செய்துள்ளதாகக் கூறப்படுவது பற்றிய குற்றச்சாட்டு குறித்து எழுப்பட்ட கேள்விக்கு நேரடியாக அவர் பதில் கூறவில்லை.
‘இவ்விவகாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படுவதால், நான் கருத்து கூற விரும்பவில்லை” என்று காலிட் மலேசியாகினியிடம் கூறினார்.
இந்த வழக்கு சம்பந்தமாக மலேசிய போலீஸ் அமெரிக்க பெடரல் புலன்விசாரணை அமைப்புடன் (எப்பிஐ) தொடர்பு வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதிலிருந்தே தெரிய வில்லையா? நீதிபதிகளில் இருந்து காவலர்கள் யாவரும் அம்னோ குண்டர்கள்? தகுதி தரமில்லா ஜடங்கள் உயர் பதவியில் இருந்து நம்மை எல்லாம் முட்டாள்கள் ஆக்கி கொண்டிருக்கின்றனர்.
கழுவும் மீனில் நழுவுற மீனாக இருக்கின்றாரே நம்ம காவல் தலைவர்!.