புவா பற்றி எப்பிஐ-க்கு எழுதப்பட்ட கடிதம் வழக்கிலிலிருந்து அகற்றப்பட்டது

letterஉள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி அமெரிக்க  புலன் விசாரணைப்  பிரிவு(எப்பிஐ)க்கு  எழுதிய  ஒரு கடிதம்  சூதாட்டத்  தலைவர்  என்று  கூறப்படும் ஒருவரின்  எதிர்வாதத்துக்குப்  பயன்படுத்தப்படுவதற்கு   புத்ரா ஜெயா ஆட்சேபம்  தெரிவித்ததை  அடுத்து  அக்கடிதம்  நெவாடா  மாவட்ட  நீதிமன்றத்திலிருந்து  மீட்டுக்கொள்ளப்பட்டது.

டிசம்பர் 18-இல், ஜாஹிட்  எழுதிய எப்பிஐ  துணை  இயக்குனர்  மார்க் எப். குயில்யானோவுக்கு  எழுதிய  கடிதத்தில், சூதாட்டக்  கும்பல்  தலைவர்  என்று  கூறப்படும்  பால்  புவா  வென்  செங்  அனைத்துலக  இரகசிய  கும்பலான  14கே உறுப்பினர்  அல்லர்  என்று  குறிப்பிட்டிருந்தார்.

புவா  “தேசிய  பாதுகாப்பு”  விவகாரங்களில்  மலேசியாவுக்கு  உதவினார்  என்றும்  அமைச்சர்  கூறியிருந்தார்.

அமெரிக்க  அதிகாரிகள்,  புவாவும்  அவரின்  மகன்  புவா வைட்  கிட்- டும் 14கே இரகசிய  கும்பலைச்  சேர்ந்தவர்கள்  என்று  நம்பி அவர்கள்மீது  சட்டவிரோத  சூதாட்டம்  நடத்தியதாக  குற்றம்  சாட்டியுள்ளனர்.

லாஸ்  வெகாஸில்  தொடரப்பட்ட  வழக்கில்  புவா-வின்  வழக்குரைஞர்கள்  தங்கள்   எதிர்வாதத்துக்கு  ஆதாரமாக  அக்கடிதத்தையும்  தாக்கல்  செய்திருந்தனர்.