1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) தலைமை செயல் அதிகாரியின் பதவி விலகலும் புதிய செயல்முறை தலைவரின் நியமனமும் அந்த அரசு முதலீட்டு நிறுவனத்தில் நிலைமை சரியில்லை என்பதைக் காண்பிப்பதாக டிஏபி எம்பி டோனி புவா கூறுகிறார்.
“சிறப்பாக செயல்படுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தில் பெரிய மாற்றம் நடைபெறுவது வழக்கமில்லை.
“அதுவும் 1எம்டிபி தலைவர் லொடின் வொக் கமருடின் அந்நிறுவனத்தில் எல்லாம் நல்லாவே நடைபெறுவதாக அண்மையில்தான் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்”.
ஆனால், முகம்மட் ஹாஸேம் அப்துல் ரஹ்மான் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகியதும் அருள் கந்தா கந்தசாமி செயல்முறை தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதும் வேறு விதமாகத்தான் நினைக்க வைக்கின்றன என்று புவா கூறினார்.
இதுவரை எத்தனை தலைமைத்துவ மாற்றங்கள்? மூன்று கணக்காய்வு நிறுவனங்கள்.. 7 பில்லியன் கேய்மன் முதலீடு கேள்விக்குறி….. மலாயன் வங்கி மற்றும் RHB வங்கிக்கு திருப்பிக் கொடுக்கவேண்டிய கடனின் காலக்கெடு நீட்டிப்பு .. எல்லாவற்றிலும் சுணக்கம்… தேசிய வங்கியின் தயக்கம்..மகாதீரின் அண்மைய மௌனம்..!!! நிதி அமைச்சராகிய நமது பிரதமர் மற்றும் துணை அமைச்சரின் மௌனம்…. ஐயோ!!! 42 பில்லியன் மக்கள் பணம் இன்றைய நிலையில் 45 பில்லியன்….நாட்டின் மொத்த கடன் அளவு ஏறக்குறைய 58% … கிரீஸ் நாட்டைப்போல் மலேசியா….மலேசியா பொலெஹ்!!!!!!
காசேதான் கடவுளப்பா, இது அந்த கடவுளுக்கும் தெரியுமப்பா!.
இங்கு நடக்கும் ஊழல்களுக்கு யாரும் பதில் கூற தேவை இல்லை. இதனால்தான் அன்றில் இருந்து இன்றுவரை இந் நாட்டு வளங்கள் நாரடிக்கப்படுகின்றது அத்துடன் இவன்களின் வங்கி கணக்கு ஏறிக்கொண்டே போகின்றது.