QZ8501 : வானிலை சற்று சீரடைந்திருப்பதால் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது

QZ8501கடந்த  ஒன்பது  நாள்களாக  நிலவிய  மோசமான வானிலை  ஏர்  ஏசியா QZ8501  விமானத்தைத்  தேடும்  முயற்சிக்குப்  பெரும்  இடையூறாக  இருந்தது.  இன்று  வானிலையில்  ஒரு  மாற்றம்  காணப்பட்டிருப்பதைத்  தொடர்ந்து  விமானத்தின்  கருப்புப்  பெட்டியைத்  தேடி  எடுப்பதிலும்  இறந்த  பயணிகளின்  சடலங்களை  மீட்டெடுப்பதிலும்  தேடும்  குழுக்கள்  மும்முரமாக  ஈடுபட்டனர்.

இந்தோனேசிய  அதிகாரிகள்  விமானத்தின் வால்  பகுதியும்  உடல் பகுதியும்  ஜாவா  கடலின்  அடியில்  கிடக்கும்  இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக  நம்புகிறார்கள். ஆனால், முக்குளிப்போரை  அனுப்பி  ஆராயலாம்  என்று  பார்த்தால்  வேகமான  நீரோட்டமும், கடுங்  காற்றும்  பெரிய அலைகளும்  அதற்குத்  தடையாக  உள்ளன.

டிசம்பர்  28-இல், சுராபாயாவிலிருந்து  சிங்கப்பூருக்குப்  பறந்து  கொண்டிருந்தபோது QZ8501 விமானம்  போர்னியோ  தீவுக்கு  அப்பால்  கடலில்  விழுந்தது.  அவ்விபத்தில்  அதில்  பயணித்த  162 பயணிகளில்  எவரும்  உயிர்  தப்பியதாக  தெரியவில்லை.