ஸைட் இப்ராகிம்: சிவில் நீதிமன்றத்தை விட உயர்ந்த நீதிமன்றம் இல்லை

 

Zaid no court1ஒரு சிவில் நீதிமன்ற நீதிபதி உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்வு காண முடியாது என்று சொல்லக்கூடாது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறினார்.

கல்விமான் காசிம் அஹமட் விவகாரத்தில் வழங்கப்பட விருந்த தீர்ப்பை கேட்பதற்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஸைட், தாம் மலேசியாவில் ஒரே ஒரு நீதிமன்ற அமைவுமுறைதான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதற்காக பேணி வளர்க்கப்பட்டவன் – அதாவது, சிவில் நீதிமன்றம்.

இந்நாடு முழுவதிலும் சட்டச் சூழ்நிலை சீர்குலைந்து இருக்கிறது என்று கூறிய அவர், இன்றையத் தீர்ப்பு குறித்து தாம் ஆச்சரியபப்டவில்லை என்றார்.

“ஷரியா நீதிமன்றம் கீழ்மட்ட நீதிமன்றம் என்று கருதப்படுகிறது, அதாவது தகுதியில் குறைந்தது. ஒரு சிவில் நீதிமன்ற நீதிபதி இங்கு (உயர்நீதிமன்றத்தில்) தீர்வு இல்லை என்று சொல்லவே கூடாது, ஏனென்றால் அப்படி ஒன்றும் கிடையாது”, என்று அவர் மேலும் கூறினார்.

“சாட்சியத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள் அடிப்படையில் (ஒரு மனுவை) தள்ளுபடி செய்ய விரும்பினால், அது சரியானதுதான். சட்ட அடிப்படையில் அதை தள்ளுபடி செய்ய விரும்பினால், அது சரியான சட்டம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

“இந்நாட்டில், சிவில் நீதிமன்றத்தை விட உயர்ந்த நீதிமன்றம் ஏதும் இல்லை. சிவில் நீதிமன்றத்தை தவிர வேறு எதிலிருந்தும் ஒருவர் தீர்வை பெற முடியாது”, என்பதை ஸைட் வலியுறுத்தினார்.

காசிம் அஹமட்டை கெடா, கூலிமிலுள்ள அவருடை இல்லத்தில் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய இலாகா கைது செய்தது. அச்செயல்Zaid no court2 அவர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. அவர்களது நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்ற வாதத்தை காசிம்மின் வழக்குரைஞர் முன்வைத்தார். அவ்வாறான அரசமைப்புச் சட்டத்தை அத்துமீறிய சாத்தியம் இருக்கலாம் என்பது குறித்து நீதிபதி அஸ்மாபி முகமட் அவரது தீர்ப்பில் முடிவு ஏதும் செய்யவில்லை.

82 வயதான காசிம் அஹமட்டின் நீதி விசாரணை மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அஸ்மாபி, காசிம் ஷரியா நீதிமன்றத்திலிருந்து பரிகாரம் காண வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

அரசமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றி முடிவெடுக்க வேண்டியது சிவில் நீதிமன்றமே தவிர ஷரியா நீதிமன்றமல்ல என்பதை ஸைட் இப்ராகிம் சுட்டிக் காட்டினார்.

இது ஏன் என்றால், அரசமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அர்த்தமும் விளக்கமும் அளிக்கும் அதிகாரம் சிவில் நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.