அரசாங்கத்துக்குச் சொந்தமான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) நிதிப் பிரச்னைகளால் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மிகுந்த நம்பிக்கையுடன் தோற்றுவித்த அந்த முதலீட்டு நிறுவனத்துக்குப் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் அருள் கந்தா கந்தசாமி.
1எம்டிபி எதிர்நோக்கும் சிக்கல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அதன் பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டு அதை நல்ல நிலைக்குக் கொண்டுவர அருளால் முடியுமா?
“அந்த நம்பிக்கை இல்லையென்றால் இப்பொறுப்பை ஏற்றிருக்க மாட்டேன்”, என்கிறார் அருள். மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் அவர் இந்த நம்பிக்கையைத் தெரிவித்திருந்தார்.
“எந்த நிறுவனமும், அது பன்னாட்டு நிறுவனமாயினும் தெருக்கோடியில் உள்ள சிறிய கடையாயினும் அவ்வப்போது பிரச்னைகளை எதிர்நோக்கத்தான் வேண்டியிருக்கும். 1எம்டிபி-இன் நிலையும் அதுதான்.
“….ஆனால், அவற்றுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.
அருள், லண்டன் யுனிவர்சிடி கல்லூரியில் நிறுவன, வர்த்தக சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். 2008-இலிருந்து அபு தாபி கமர்சியல் வங்கியின் உதவித் தலைவராகவும் அதன் நிறுவன நிதிப் பிரிவின் தலைவராகவும் இருந்து நிதியியல் துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்.

























வாழ்த்துக்கள்! innoru tony fernandas uruvaagiraar.
நம்புவோம் .
திருப்புமுனையுடன் வெற்றி பெற வாழ்த்துகள் அன்பரே!!!!
அருள் கந்தா கந்தசாமி…சிக்கல்களை அறிந்தே பொறுப்பேற்றீர்கள். அது உங்கள் திறமைமேல் உங்களுக்கு உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆனால், அந்த சிக்கல்கள் களையப்பட்டு ஆதாயத்தை நோக்கி நடை போடும்போது நீங்கள் கறிவேப்பிளை ஆவீர்கள் என்பதை நாங்கள் அல்லவா அறிவோம்… முடிவில் நொந்தசாமி ஆகாமல் அந்த கந்தசாமி காக்கட்டும்.