எரிபொருள் விலை 30-இலிருந்து 35 சென் குறைந்தபோதிலும் வணிகர்கள் பொருள் விலைகளைக் குறைக்காதிருப்பது கண்டு அம்னோ இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு உதவித்தொகை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்ந்தவுடன் பொருள் விலைகளை உயர்த்துவதில் வேகம் காட்டிய வணிகர்கள் இப்போதும் அதே வேகத்தைக் காட்ட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு துணைத் தலைவர் கைருள் அஸ்வான் ஹருன் கூறினார்.
விநியோகிப்பாளர்கள் இடைத் தரகர்கள் ஆகியோரின் ஆதாயம் தேடும் போக்குக்குத் தாங்களும் பலிகடா ஆவதாக வணிகர்கள் கூறும் சாக்குபோக்குகளை ஏற்க அவர் தயாராக இல்லை.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருப்பதால் பொருள் விலைகளைக் குறைத்து வணிகர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
டிஎன்பி கட்டணம் குறையாதது ஏன்?
இன்னொரு புறம், டிஏபி செனாய் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஷு கை எரிபொருள் விலை குறைந்திருக்கும்போது அரசாங்கம் மின் கட்டணத்தை குறைக்காதது ஏன் என்று வினவினார்.
எரிபொருள் விலை உயர்ந்து விட்டதே என்று தெனாகா நேசனல் பெர்ஹாட்(டிஎன்பி) ஒப்பாரி வைக்கும்போதெல்லாம் மின் கட்டணத்தை விரைந்து உயர்த்தும் அரசாங்கம் எரிபொருள் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும்போது மவுனமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றாரவர்.
“நியாயமற்ற மின்கட்டணம் மக்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதை அறியாது நீர், பசுமைத் தொழில்நுட்பம், எரிபொருள் அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி விடுமுறையில் சென்று விட்டாரா?”, எனவும் அவர் வினவினார்.
அரசாங்கம் விலைவாசியை கட்டுப் படுத்த தவறி விட்டது. எண்ணெய் விலை குறைந்தும் எல்லா பொருட்களின் விளையும் கிடுகிடுவென உயர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது..? அம்னோ இளைஞர்கள் அங்காங்கே குரல் எழுப்ப வேண்டும்..!
அது எப்படி குறைப்பாணுங்க அப்புறம் JETla பறக்க உன் குடும்பமா கொடுக்கும் தமிழனும் சீனனும்தான கொடுக்கணும் உங்களுக்குதான் எல்லாமே இனாம் ஆட்சே