இணையத் தளத்தை இரும்புப் பிடியால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தவறிவிட்டாராம் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய (எம்சிஎம்சி) தலைவர் முகம்மட் ஷரில் தர்மிஸி. அதனால் டிசம்பர் 31-உடன் முடிந்த அவரது பணிஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லையாம்.
உத்துசான் மலேசியாவில் அதன் செய்தி ஆசிரியர் சுல்கிப்ளி ஜலில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.
11-ஆண்டுகள் ஷரில் தலைவராக இருந்த காலத்தில் எம்சிஎம்சி இணையத்தில் இனவெறுப்பூட்டும் கருத்துத் தெரிவிப்போரைக் கட்டுப்படுத்தவில்லை.
“இணையத்தில் கூட்டரசு அரசமைப்பை அவமதிக்கும் பதிவுகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது”, என சுல்கிப்ளி கூறினார்.