பிரான்சின் சார்லி ஹெப்டோ செய்தித்தாள் அலுவலகம் தாக்கப்பட்டுச் செய்தியாளர்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்த மலேசிய அரசியல் கேலிச்சித்திரக்காரரான ஸுனார், இஸ்லாமிய தீவிரவாதிகள் இஸ்லாத்தில் உள்ள நல்ல விசயங்களை எடுத்துக்காட்ட கேலிச் சித்திரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.
“கேலிச்சித்திரங்களுக்கு எதிராகக் கருத்துவேறுபாடுகள் தெரிவிக்கப்பட்டால் அவற்றையும் நாகரிகமான முறையில்தான் எதிர்கொள்ள வேண்டும்”, என ஸுனார், அவரின் உண்மைப் பெயர் சுல்கிப்ளி அன்வார் ஹாக், குறிப்பிட்டார்.
சார்லி ஹெப்டோ தாக்குதலில் கொல்லப்பட்டவர் நினைவாக ஜனவரி 7-ஐ “உலகக் கேலிச்சித்திரக்காரர் தின”மாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
நேற்று பாரிசில் அக்கேலிச்சித்திரப் பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12பேர் கொல்லப்பட்டனர்.
மலேசியாவிலே ஒரு மாங்கா மடையன் …சேர்த்து கொள்ளுங்கள் அவன் தான் நல்ல …பிடித்து நல்லா கர்த்துன் வரைவான்