யுஎம் பணியாளர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை

letterமலாயாப்  பல்கலைக்கழக(யுஎம்)த்தில்  மாணவர் செயற்பாட்டுவாதம்  அதிகரித்துவரும்  வேளையில்,  பல்கலைக்கழகப்  பணியாளர்கள் எந்தவித  அரசியல்  நடவடிக்கையையும்  ஏற்பாடு  செய்யத்  தடை  விதிக்கப்பட்டிருக்கிறது.

இதன்  தொடர்பில்  யுஎம்  பதிவாளர்  யூசுப்  மூசா.  பல்கலைக்கழகப்  பணியாளர்களுக்கு  அனுப்பிய  கடிதத்தை  மூத்த  பொருளியல்  விரிவுரையாளர்  லீ  ஹ்வொக்  ஆன்  முகநூலில்  பதிவிட்டிருக்கிறார்.

அக்கடிதம்,  எல்லாப்  பணியாளர்களும் “விடுப்பில்  இருப்பவர்களும்  கல்வி  விடுப்பில்  இருப்போரும்  கருத்தரங்கு  அல்லது  பயிலரங்குகளில்  கலந்துகொண்டிருப்போரும் நாட்டுக்குள்ளும் வெளியிலும்”  அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத்  தடை  விதிக்கப்பட்டிருப்பதாகக்  கூறியது.

நாட்டின்  கெளரவத்தைப்  பாதுகாக்கவும்  நிலைநிறுத்தவும்  தவறுவோரிடமும்  சட்டங்களை  மதிக்காதோரிடமும்  யுஎம்  அதிகாரிகள்  கடுமையாக  நடந்துகொள்வர்  எனவும்  அக்கடிதம்  கூறியது.