சரவாக்கில் சட்டமன்றத் தொகுதிகள் மட்டும் அதிகரிக்கப்பட்டது ஏன்?

ecசரவாக்கில் நாடாளுமன்றத்  தொகுதிகளின்  எண்ணிக்கையை  அதிகரிக்காமல்  சட்டமன்றத்  தொகுதிகளை  மட்டும்  அதிகரித்ததன்  நோக்கம்  என்னவென  டிஏபி   செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங் கேள்வி  எழுப்பியுள்ளார்.

வாக்காளர்  எண்ணிக்கை  கூடியுள்ளதால்  சட்டமன்றத்  தொகுதிகளின்  எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டது  என்றால் .அதே  காரணத்தின்  அடிப்படையில்  நாடாளுமன்றத்  தொகுதிகளின்  எண்ணிக்கையும்  கூட்டப்பட  வேண்டியதுதானே  நியாயம்  என்றாரவர்.

“நாடாளுமன்றத்  தொகுதிகளை  அதிகரிக்க  நாடாளுமன்ற  அளவில்  அரசமைப்புத்  திருத்தம்  செய்யப்பட  வேண்டும். நாடாளுமன்றத்தில்  பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பங்கு  பெரும்பான்மை  இல்லை. இதுதான் காரணமோ  என்ற  சந்தேகம்  எழுகிறது”,  என ஒங்  குறிப்பிட்டார்.

தேர்தல்  ஆணையம்  சரவாக்கில்  சட்டமன்றத்  தொகுதிகளின்  எண்ணிக்கை  71-இலிருந்து  82 ஆக  அதிகரிக்கப்பட்டிருப்பதாக  நேற்று  அறிவித்தது.