சீண்டி விடுவது சார்லி ஹெப்டோ-வின் வேலை, அதற்காகக் கொலைசெய்வது தப்பு

wrongமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  கொலை  செய்வது  தவறான செயலாகும்  என்று கூறி  அதேவேளை,  சினமூட்டுவதைத் தவிர  வேறு   எதையும்  செய்யாத  ஒரு  செய்தித்தாள்  சார்லி  ஹெப்டோ  என்பதையும்  குறிப்பிட்டார்.

நையாண்டி  செய்வதையே  வழக்கமாகக்  கொண்ட  அசெய்தித்தாள்  இஸ்லாத்தையும்  நபிகள் நாயகத்தையும்  மதிப்பதில்லை  என்று மகாதிர்  கூறியதாக  உத்துசான்  ஆன்  லைன்  மேற்கோள்  காட்டியுள்ளது.

“முகம்மட்  நபி  பற்றிக்  கேலிச்சித்திரங்களை  வரைவார்கள். இது  ஒரு வகை  சினமூட்டும்  செயலாகும். முஸ்லிம்கள்  கொலைச் செயலில்  ஈடுபடக்கூடாதுதான்.  என்றாலும்,  மிகுந்த  சினம்கொண்டு  இதை(கொலை)ச்  செய்யும்  முஸ்லிம்களும்  இருக்கவே  செய்கிறார்கள்.

“முஸ்லிம்களின்  மனம்  நோகும்  என்பதை  அறிந்தும்  நபிகளைக்  கேலி  செய்வதன்  நோக்கம்  என்ன? பாதுகாப்புடனும்  பலத்துடனும்  இருக்கிறோம் அதனால் விருப்பம்போல்  நடந்துகொள்ளலாம்  என்று  நினைக்கிறார்களா?”,  கோலாலும்பூரில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.

கொலை  செய்வதைத்  தாம்  என்றும்  ஆதரித்ததில்லை  என்று  கூறிய  முன்னாள்  பிரதமர்,  அதேவேளை  மற்றவர்களை  வேண்டுமென்றே  சீண்டிக்கொண்டிருக்கவும்  கூடாது  என்றார்.