மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)ப் பணியாளர்கள் அரசியல் நடவடிக்கையை ஏற்பாடு செய்யத் தடை விதிக்கப்பட்டிருப்பது கட்டுப்பாடுமிக்க பல்கலைக்கழக, பலகலைக்கழகக் கல்லூரிச் சட்ட(யுயுசிஏ)த்தை விடவும் கொடுமையாக இருக்கிறது என பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் கூறினார்.
“1971-இல் கொண்டுவரப்பட்ட யுயுசிஏ 20120-இல் செய்யப்பட்ட திருத்தங்களால் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் வேளையில் இந்தத் தடைவிதிப்பு அதை விடவும் மோசமாக இருக்கிறது”, என்றாரவர்.
டிசம்பர் 23 தேதியிடப்பட்ட அச்சுற்றறிக்கை, எல்லாப் பணியாளர்களும், விடுப்பில் இருப்பவர்கள், கல்வி விடுப்பில் இருப்போர், கருத்தரங்கு அல்லது பயிலரங்குகளில் கலந்துகொண்டிருப்போர் உள்பட, நாட்டுக்குள்ளும் வெளியிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கிறது.