முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியும் மூத்த வழக்குரைஞருமான கோபால் ஸ்ரீராம், பரஸ்பரம் இணக்கத்துடனேயே மிங் அண்ட் நிஷ்ரா வழக்குரைஞர் நிறுவனத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதாகக் கூறினார்.
அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் அவருக்காக கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்காட முடிவு செய்ததால் அந்நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நெருக்குதலுக்கு ஆளானார் என்று கூறப்படுவதை மறுத்த ஸ்ரீராம், தாம் இப்போதும் அந்நிறுவனத்தின் நல்ல நண்பராகவே இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
“தயவு செய்து கதைகட்டி எங்கள் நட்பைக் கெடுத்து விடாதீர்கள்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அன்வாருக்காக வாதாடியதால்தான் அவர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேற நேர்ந்தது என த மலேசியன் இன்சைடரில் வெளிவந்திருந்த செய்தி பற்றி வினவியதற்கு ஸ்ரீராம் இவ்வாறு கூறினார்.
பரஸ்பரம் இணக்கத்துடன் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி சொந்த நிறுவனத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
“எனக்குப் பிடித்தமான வழக்குகளை எடுத்து நடத்த விரும்புகிறேன். இதில் ஒரு பிரச்னை இல்லை”, என்றார்.