கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தோனேசிய தேடல், மீட்புக் குழு இன்று சில துடிப்புகளை அடையாளம் கண்டிருப்பதாக தெரிவித்தது.
விமானி அறை உரையாடலைப் பதிவுசெய்யும் பதிவியும் விமானத்தின் பயணத் தடம் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவியும் கருப்புப் பெட்டியில்தான் இருக்கும். கருப்புப் பெட்டி வால் பகுதியில் இருக்கும். ஆனால், அவை வால்பகுதியில் இருப்பதாக தெரியவில்லை.
துடிப்பொலிகளை வைத்துப் பார்க்கையில் அவை வால் பகுதிக்கு வெளியில் இருந்து வருவதாக தோன்றுகிறது எனத் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் ஆய்வாளர்களில் ஒருவரான சந்தோசோ சயோகோ கூறினார்.
“அது கருப்புப் பெட்டியாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கிறோம். முக்குளிப்போர்தான் அதை உறுதிப்படுத்த வேண்டும்”, என்றார்.
விமான விபத்து நடந்தால் , முதலில் பேசபடுவது கருப்பு பெட்டிதான். ஆனால் கருப்பு பெட்டி கிடைத்துவிட்டால் ;அதிலுள்ள தகவல் யாருக்கும் சொல்வதில்லை . ஒவ்வொரு விமான விபத்திலும் இதுதான் நடக்கிறது. .