சமூக ஆர்வலரும் மலேசியாகினி பத்தியாளருமான ஹிசாமுடின் ராயிஸ் தேச நிந்தனைக் குற்றம் புரிந்துள்ளார் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அக்குற்றத்திற்கு தண்டனையாக அவருக்கு ரிம5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதனை 6 மாததிற்குள் செலுத்தாவிட்டால் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்மான் முஸ்தாபா அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.
அரசு தரப்பு குற்றச்சாட்டை வெற்றிகரமாக நிருபித்துள்ளது என்று கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
பிஎன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார் என்பது ஹிசாமுடின் ரயிஸ்க்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.
தெருவுக்கு வாருங்கள் என்று தாம் கூறியது இளைஞர்களை தெருப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு உற்சாகமூட்டும் நோக்கத்தைக் கொண்டது என்று ஹிசாம் விளக்கமளித்தார்.
“அது ஓர் அச்சுறுத்தல் அல்ல. சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அரசாங்கத்தை தெருப் போராட்டத்தின் மூலம் கவிழ்ப்பதற்கான ஒரு வாக்குறுதி”, என்று ஹிசாம் மேலும் கூறினார்.
நியாயத்தை சொன்னால் நடுத்தெருவுக்கு அல்ல நீதிமன்றத்துக்கும் செல்லத்தான் வேண்டுமோ…?
தலை வணங்குகிறேன், ஹிஷாமுடின் ராயிஸ்!
pooraadavaathikalukku
அடக்குமுறையில் தான் ஆட்சி புரியமுடியும் இந்த திருட்டு ஆட்சியாளர்களுக்கு. பொய்யும் பித்தலாட்டத்தினாலும் தானே இவன்கள் ஆட்சியை திருடினான்கள். நியாயத்துடன் எப்படி ஆட்சி புரியமுடியும்?
ஜனநாயகத்தில் ஒரு நாட்டின் குடிமகன் அவன் நாட்டைப் பற்றி அவதுராகவோ தரக் குறைவாகவோ பேசக் கூடாது. அனால் அரசாங்கத்தை பற்றி குறை kuuralaam, மாற்றச் சொல்லலாம். அம்னோ மக்களை மடையர்களாக முயற்ச்சிக்கிறது. போன தேர்தலின் பொது மக்கள் பிரதமர் ஒரு தொகுதியில் சொன்னார், நீங்கள் எங்களை கவனியுங்கள் நாக்கல் உங்களை கவனுத்துக் கொள்கிறோம் என்று. இது ஜனநாயக தேர்தல் சட்டத்தின் படி குற்றமாகும். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. நம் நாட்டின் நீதித் துறை ஒரு சிலரது கட்டுபாட்டில் உள்ளது போல் தெரிகிற்றது.
ஹிசாம் ராயிஸ் அவர்களை பார்பதற்கு ,குரங்கு தலையில் தொப்பி அணிந்த மாதிரி இருக்கிறது .அந்த சிரிப்பும் ,குறுந்தாடியும் ,ஆ ஆ ,உண்மையான குரங்குதான் .