பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் 1948 தேச நிந்தனைச் சட்டத்தை வைத்திருப்பது அவசியம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது என்கிறார் போலீஸ் படைத் தலைவர்.
“அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் நமக்கு தேச நிந்தனைச் சட்டம் தேவைப்படுகிறது. யாரும் சமயத்தை இழிவுபடுத்த போலீஸ் இடமளிக்காது”, என டிவிட்டரில் ஐஜிபி காலிட் அபு பக்கார் கூறியிருந்தார்.
தேச நிந்தனை சட்டம் தவறாக பயன்படுகிறது மலேசியா. அதனை முதலில் கவனியுங்கள்.
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறான். அந்த சட்டம் ஆளை பார்த்து ஏம்பா பாயுது? இந்நாட்டு மக்கள் எல்லாம் அவ்வளவு மோசமான தீவிரவாதிகளா? சட்டத்தை மாற்றக்கூடாது உன்னை மாத்தணும்.
அப்படியானால் மலேசியா தீவிரவாதிகள் வாழும் நாடா ?
உண்மையை ஒப்பு கொண்ட ஐஜிபி காலிட் அபு பக்கார்,
அந்த தீவிரவாதிகள் முஸ்லீம்களா? சீனர்களா? இந்துகளா?
அல்லது BN அரசாங்கத்தின் ஆதரவோடு நாட்டில் வாழும்
கள்ளகுடியேறிகளா? என்பதை புள்ளி விவரத்தோடு கூறுவாரா ?
பல தடவை இந்து மதத்தை இழிவு படுத்தியும் சட்டம் பாய வில்லையே. இதற்க்கு சாந்தியும்,கும்கியும் பதில் தருவார்கள்
என்று எதிர் பார்க்கலாம்.
அந்த பயங்கரவாதிகள் யார் சாமியோ !!!
இனவாத அறிக்கையை வெளியிட்ட முன்னாள் தலைமை நீதிபதி மீது முதலில் நடவடிக்கை எடு. பிறகு இச்சட்டம் வேண்டுமா வேண்டாமா என்று மக்களே முடிவு சொல்வர்…சிற்றெரும்பு
என் அறிவுக்கு எட்டியவரை நாட்டின் தற்போதைய பயங்கரவாதிகள், மொங்கோலிய நாட்டு பெண்மணி அல்தாந்துயாவை நம் நாட்டில் C4 வெடிகுண்டு வைத்து பீஸ் பீசாக்கிய வர்கள். அவர்களை பிடிக்கும் தைரியமோ அல்லது அவர்கள் யார் என்று கூறு தைரியமோ இந்த ஐஜிபி க்கு உண்டா?
சிங்கம் அவர்களே இவ்வளவு பட்டவர்த்தனமாக சொல்லிலும் உங்களின் வீடுதேடி தேசநிந்தனை சட்டம் சீறிபாயும்,வயதான காலத்தில் தேவையா அண்ணே !
தம்பி அலை ஓசை அவர்களே! தொண்ணூறு வயதாகும் மகாதிமிரின் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரே இன்னும் நம்மை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரைவிட நான் சிறியவன்.எனக்கு இப்பத்தான் 85 வயசு. முன்பு DAP யில் கி.இராமன் என்றொவர் இருந்தார். நல்ல போராட்டவாதி. சிரம்பானை சேர்ந்தவர். மேடையில் எப்படி முழங்குவார் தெரியுமா? மகாதீரின் பீரங்கி என் மயிருக்கு சமம் என்பார். இப்போது எதிர்கட்சிகளில் உள்ள ஓணான் குஞ்சுகளுக்கு அந்த தைரியம் வருமா? நீங்கள் சொல்வது தேச நின்தனை சட்டம் என் வீடு தேடி வருமானால், ஒருதலை பட்சமான அந்த சட்டத்தின் மீது என் பேரப்பிள்ளைகளே சிறுநீர் கழித்துவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், பிரான்சில் ஊடகத்தினர்மீது நடந்த கொலைகளை வரவேற்கிறார் பெர்காசாவின் இப்ராஹிம் அலி. வன்முறைக்கு தூபம் போடும் இந்த அலி மீது தேச நிந்தனை சட்டத்தை பாய்ச்ச இந்த சுண்டெலி ஐஜிபி முன்வருவாரா?
ஐஜிபி அவர்களே! நம் நாட்டிற்கு தேச நிந்தனை சட்டம் தேவை என்கிறீர்கள். எதற்காக? அயல்நாட்டு பெண்மணியான அல்தாந்துயா என்பவரை வெடி குண்டு வைத்து கொன்ற பயங்கரவாதிகளையே கண்டு பிடிக்க முடியவில்லை. உங்கள் லட்சணத்தைக் கண்டு உலகமே சிரிக்கிறது. சரி அது போகட்டும். மாட்டுத் தலையை இழுத்து வந்து,இந்நாட்டு ஹிந்துக்களின் மனம் புண்படச் செய்தவர்கள் மீது நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? பைபிளை எரிக்கச் சொன்னவர்கள் மீது உங்கள் சட்டம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? இந்தோனேசியாவில் பயங்கரவாதத்தில் ஈடுப்பட்ட ஒரு மலேசியரை அந்நாடு சுட்டுக் கொன்றது. அந்த பிணத்தை மாலை மரியாதையுடன் விமானம் மூலம் இங்கே கொண்டு வந்தீர்களே! ஏன்? மீண்டும் கேட்கிறேன். யாரை ஏமாற்ற இந்த சட்டம்?
ஐஜிபி அவர்களே! திருந்துங்கள். நல்லதை செய்ய முற்படுங்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் நல்லதையே போதிக்கின்றன. மனிதர்கள் தான் மோசமானவர்கள். பாகிஸ்தானில் 150 பள்ளிப் பிள்ளைகளை கொன்றார்களே. அதே நேரத்தில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுப்பட்டிருந்த அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொன்றது, தாலிபான்(Taliban }. அந்த வரிசையில் உள்ளவைதான், போகோ ஹாராம் {Boko Haram] ஐஎஸ்ஐஎஸ் [ISIS ], அபு சயாப் [Abu Sayaaf] அல்-கய்டா [Al – Keida ] போன்றவை. பிரான்சில் அல்-கய்டா புரிந்த கொலைகளை வரவேற்கிறது நம் நாட்டின் பெர்காசா. பெர்காசா போன்றே செயல்படுபவை இஸ்மா [isma] பெகிடா [Pekida] போன்றவை. இந்த மூன்று இயக்கங்களும் நம் நாட்டில் இன உணர்சிகளை தூண்டுவது மட்டுமல்லாமல் பயங்கரவாதத்தையும் வளர்பவை. சவால் விடுகிறேன், உங்கள் சட்டம் இவர்கள் மீது பாயுமா?
நம் தலைநகரின் அருகில் சிறி முடா என்னுமிடத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதுண்டு. ஒரு சமயம், ஆலயம் ஒன்றில் வெள்ளம் புகுந்து விட்டதாக அறிகிறேன். அவ்வமயம் சூல்கிப்லி நூர்தீன் என்பவர் பரிகாசமாக, ‘உங்கள் ஆண்டவன், அவன் தனது இல்லத்தையே பாதுகாக்க முடியவில்லையா?’ என்றாராம். இந்த ‘அறிவாளிக்கு’ தேர்தலில் போட்டியிட சீட்டும் கொடுத்தார், நஜிப். தற்போது, கிழக்கு கரையோரங்களில் வரலாறு காணாத வெள்ளம். அப்பாவி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். ‘ஒரு நாளைக்கு ஐந்து முறை கும்பிடுகிறீர்களே, உங்கள் ஆண்டவன் உங்களை கவனிக்க வில்லையா?’ என நான் கேட்கலாம். கேட்டால் சூல்கிப்லி நூர்டினுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அனைத்தும் ஆண்டவனின் செயல். சூல்கிப்லி போன்ற மதவெறியர்களுக்கு இந்த வெள்ளப்பெரிடர் ஒரு நல்ல பாடம். [பாதிக்கப்பட்ட கிளந்தான் மக்களை சென்று கண்டு, என்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தேன், ]
ஜுல்கிப்லி ஒரு கழுதை மடையன் சிங்கம் ஒரு சிங்கம் நீர் BN ஆதரிக்காதவரை .
பண்டார் பாங்கி என்னுமிடத்தில் ஒரு கடையில், மூன்று மாதங்களாக உலக பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட சில பொருட்கள் விற்கப்பட்டதாம். இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பயங்கரவாதிகளின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட டி-சட்டைகள், தொப்பிகள், கொடிகள் என பலவித பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. நல்ல கிராக்கியாம். போலீசாருக்கும் தெரியுமாம். அப்படியானால்……………