மலாயாப் பல்கலைக்கழகம் அதன் பணியாளர்கள் அரசியல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதைத் தடுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் கல்விச் சுதந்திரத்துக்கு உத்திரவாதமுண்டு என்று துணை வேந்தர் முகம்மட் அமின் ஜலாலுடின் கூறினார்.
அரசாங்கப் பல்கலைக்கழகமான அது மலேசிய அரசமைப்புச் சட்டங்களை மதிக்கிறது என அமின் கூறினார். அதில் கல்விச் சுதந்திரமும் அடங்கும்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்-டைப் பல்கலைக்கழகத்துக்கு உரையாற்ற அழைத்த எம்யு, எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குத் தடை போட்டதைச் சுட்டிக்காட்டி அது இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிக்கிறதா என வினவியதற்கு. “நடப்பு விவகாரங்களைக் கல்வி நோக்கில் விவாதிக்க” யாரும் பல்கலைக்கழகம் வரலாம் என அமின் பதிலளித்தார்.
“2012-இல், யுஎம் ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் (பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்) எலிசபெத் வொங் கலந்துகொண்டார்.
“இன்னொரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப் போகிறோம். அதில் (டிஏபி செர்டாங் எம்பி) ஒங் கியான் மிங் கலந்துகொள்வார்”, என அமின் தெரிவித்தார்.
சொன்னது மலேசியாவில் கல்வி சுதந்திரமா …முழுதும் ஆராய்ந்து எழுது