நீதித் துறையை ‘அநியாயமாக’க் குறை சொல்கிறார்கள்: சிஜே-யும் ஏஜி-யும் சாடல்

ariffinசில  மூத்த  வழக்குரைஞர்கள்  நியாயமற்ற முறையில்  நீதித்  துறையையும்  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்தையும்  குறை  கூறி  வருவதாக  தலைமை  நீதிபதி (சிஜே) அரிப்பின்  ஜக்கரியாவும்  ஏஜி அப்துல்  கனி  பட்டேய்லும்  கூறினர்.

பெயர் குறிப்பிடப்படாத  ஒரு  செய்தித்தளத்தில் ‘சட்ட  ஆளுமையை  மதிக்காத  நீதித்துறைக்குக்  கண்டனம்’  என்ற  தலைப்பில் வெளிவந்த  ஒரு  கட்டுரையை  அவ்விருவரும்  சுட்டிக்காட்டினர்.

“சில  வழக்குரைஞர்கள்,  பொது ஊடகங்களையும்  கூட்டங்களையும்  பயன்படுத்திக்கொண்டு  திரும்பத்  திரும்ப நீதித்துறையை  அநியாயமாகக் குறைகூறுவதைக் காண  மனம்  வருந்துகிறது.

“நீதித்  துறைமீது  மக்களுக்குள்ள  நம்பிக்கையைக்  குலைக்கும்  வகையில்  தாக்குதல்  நடத்துவது  நீதி  நிர்வாகத்தின்மீதே   தாக்க்குதல்  நடத்தப்படுவதற்கு  ஒப்பாகும்”, என அரிப்பின்  புத்ரா  ஜெயாவில்  ஆற்றிய உரை  ஒன்றில்  குறிப்பிட்டார்.