1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்துக்கு எதிராக போலீஸ் புகார் செய்ததால் அம்னோ உறுப்பினர்களின் கோபத்துக்கு ஆளான கைருடின் அபு ஹசான் அவருக்குச் சொந்தமான வீடு அவருக்குத் தெரியாமலேயே விற்பனைக்கு வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோலாலும்பூரில் அவருக்குச் சொந்தமான ஒரு வீடு ஏலத்தில் விடப்படுவதாக வலைப்பதிவர்கள் சொல்லித்தான் தெரிய வந்ததாக கைருடின் கூறினார்.
ஹோட்டல் இஸ்தானாவில் ஏல விற்பனை நடந்துள்ளது. முடிவு இன்னும் தெரியவில்லை.
“நான் வீட்டை விற்க நினைத்தது உன்மைதான். அதை ரிம5.1 மில்லியனுக்கு வாங்குவதற்கு ஒருவர் தயாராக இருந்தார்”, என அந்த பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் கூறினார்.
அதற்குள் அவரது வீடு ஏலம் விடப்பட்டுள்ளது. இதை விடப்போவதில்லை என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்காக வங்கி அவரை எச்சரிக்கவும் இல்லை.
ஆளும் கட்சிகளின் குறைகளை எடுத்துக் கூறினால், இதுபோன்ற அநியாயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். தாங்கிக் கொள்ளுங்கள். கேமரன் மலை காடுகளை அநியாயமாக அழித்த ஆளும் தரப்பினர் பலர் மீது நான் புகார் கூறியதன் பலன், பல வகையில் என்னை அலைக்கழித்தது இந்த ஆளும் தரப்பு. ஒருமுறை எனது சிறிய காய்கறி அங்காடியை வந்து உடைத்துப் போட்டு போய் விட்டார்கள்.
அம்னோவில் இருந்தாலும் ஊழலுக்கு எதிராக வாய்திறக்கக் கூடாது வாய் திறந்தாள் வீடு என்ன,உங்களையே ஏலம் விட்டு விடுவார்கள்,பிளாஸ்தர் ஒட்டிக்கொள்ள வேண்டும் கைருடின் அப்பு எதிர்கட்சிக்கு தாவுங்கள் !
தற்போதைய நம் நாட்டின் கிழக்குக் கரைகளின் வெள்ளப்பேரிடர்கள் அம்நோவிற்கும், மதத்தீவிரவாதிகளுக்கும் நல்ல பாடம். ஒழுங்கற்ற முறைகளிலும், அநீதியான முறைகளிலும் ஆட்சி செய்தால், அல்லாஹ் இதுபோன்ற பேரிடர்களை உண்டு பண்ணவே செய்வார். அம்னோ திருந்தாவிட்டால், நாட்டிற்கே பேரழிவு காத்திருக்கிறது.
எல்லாம் உன் கட்சி தலைவனின் வேலைதான் அவனுக்கு ராஜபக்ஷே விட கேவலமான முடிவு ரெடி .
மாதம் மாதம் வங்கிக்கு பணம் ஒழுங்கா காட்டியிருந்தால்
இப்போ புலம்பவேண்டாமே?
ஹேய் , கும்கி கொஞ்சம் அமுகிகிட்டு இருக்கியா !