ஐஜிபியின் மௌனம் போலீஸ் படையின் நன்பகத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கிறது

 

khaild igpகள்ளச் சூதாட்ட பெரும்புள்ளி என்று கூறப்படும் பால் புவா குறித்து மலேசிய போலீஸ் படை அமெரிக்காவுக்கு தவறான தகவல் அளித்துள்ளது என்ற கூறப்படுவது பற்றி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அதன் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதை அனுமதிக்ககூடாது.

இதனால் போலீஸ் படையின் மீதான நம்பிக்கை உள்நாட்டில் மட்டும் பாதிக்கப்படவில்லை, வெளிநாட்டிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

பால் புவா பற்றி போலீஸ் படை அமெரிக்க எப்பிஐக்கு அளித்துள்ள தகவல் தவறானது என்றும் புவா 14கே குண்டல் கும்பலைச் சேர்ந்தவர் அல்ல என்றும் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் டிசம்பர் 18 இல் எப்பிஐக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருக்கிறார். அது போலீசார் அளித்துள்ள தகவலுக்கு முரணானதாக இருக்கிறது.

மேலும், புவாவின் மலேசிய வழக்குரைஞர் முகமட் ஷாப்பி அப்துல்லா போலீசாரின் தவறை திருத்துவதற்காக ஸாகிட் அக்கடிதத்தைgobind எழுதியதாகத் தெரிவித்தார்.

“ஐஜிபி வெறுமனே வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருக்க முடியாது. அவர் எதிர்வினையாற்ற வேண்டும். போலீஸ் ஒரு பெரிய தவறை இழைத்துள்ளதா இல்லையா?

“தவறு செய்திருந்தால் ஒப்புக்கொள்ள வேண்டும். தவறு செய்யவில்லை என்றால், ஐஜிபி தமது படையத் தற்காக்க வேண்டும்.

“அவர் திருப்பி அடித்து ஷாப்பியும் ஸாகிட்டும் தவறு செய்துள்ளனர் என்று அவர்களிடம் கூற வேண்டும்”, என்று கோபிந்த் இன்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.