ஆகாயப் படை மேஜர் ஜைடி அஹ்மட், நீதிபதிகளை நோக்கி அவர்களின் செயலுக்கு இறைவனின் மன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்றார்.
13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை பற்றி ஊடகங்களிடம் பேசியது குற்றமே என இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தை அடுத்து ஜைடி இவ்வாறு கூறினார்.
தண்டனையைக் குறைப்பதற்காக முறையிடும் வேளையில் தொடர்ந்து அரசியலைக் கலந்து பேசிக் கொண்டிருந்தால் அவர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, “இறைவனின் நீதிமன்றத்தில் சந்திப்போம்”, என்றவர் தெரிவித்தார்.
“அரசியல் நிலவரத்தை எதிர்நோக்கும்போது தலையைவிட வயிறு பெரிதாக போய்விடுகிறது”, என்றும் ஜைடி குறிப்பிட்டார்.
“அரசியல் நிலவரத்தை எதிர்நோக்கும்போது தலையைவிட வயிறு பெரிதாக போய்விடுகிறது.” முற்றிலும் உண்மை. தெய்வம் இவர்களை நின்று கொல்லும். அதற்கு இராஜபக்சவே சிறந்த எடுத்துக் காட்டு.
சிவில் நீதிமன்றத்திலேயே சட்டம் தரிகினத்தோம் போடுது. ராணுவ நீதிமட்ரத்தில் என்ன நடக்கும் என்று,ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு தெரியும்.