பாஸ்: நாங்களின்றி டிஏபி-யால் வெற்றிபெற முடியாது

mustafaஹுடுட் உள்பட,  பல்வேறு  விவகாரங்களில்  பாஸ்  கட்சியுடன்  கருத்திணக்கம் காண முடியாத  டிஏபி அந்த  இஸ்லாமியக்  கட்சியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளவும்  தயாராக  இருப்பதுபோல்  தோன்றினாலும்  அக்கட்சியால்  தனித்து  நின்று  கூட்டரசு  அரசாங்கத்தை  அமைக்க  இயலாது.

சின்  சியு  டெய்லியின்  நேர்காணலில்  இவ்வாறு  தெரிவித்த  பாஸ்  தலைமைச்  செயலாளர்   முஸ்தபா  அலி,    பிஎன்னுக்குக்கூட  புத்ரா  ஜெயாவைத்  தன்வசமே  வைத்துக்கொள்ள பங்காளிக்  கட்சிகளின்  உதவி  தேவைப்படுகிறது  என்பதைச்  சுட்டிக்காட்டினார்.

“டிஏபி  பாஸின்  மதிப்பைக்  கெடுத்து  அதைப்  பற்றிக் கெடுதலாகவே  பேசி  வருகிறது. ஓருவேளை  புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்றுவது  சிரமம்  என்பதால்  பினாங்கை  ஆள்வதுடன்  சரவாக்கில் கூடுதல் இடங்கள்  கிடைத்தால்  போதும் என்று  அது நினைக்கிறது  போலும்”, என்று  முஸ்தபா  தெரிவித்தார்.

“அதனால்  பாஸுடன் ஒத்துழைக்க  வேண்டிய  அவசியமில்லை  என்று  டிஏபி  நினைக்கிறது. ஆனால்,  டிஏபி  தன்  சொந்த  பலத்தைக் கொண்டு  மட்டும்  நாட்டை  ஒருபோதும்  ஆள  முடியாது”, என்றாரவர்.