உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கடந்த ஆண்டு லாஸ் வெகாஸில் கைது செய்யப்பட்ட சூதாட்ட மன்னர் பால் புவா குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது பற்றி அமைச்சரவைக்குத் தெரியாது.
அமைச்சரவை முன்கூட்டியே “அதை விவாதிக்கவில்லை” என்று கூறிய துணைப் பிரதமர் முகைதின் யாசின், அவ்விவகாரத்தை நன்கு ஆராய்ந்த பிறகே வேறு எதுவும் தெரிவிக்க முடியும் என்றார்.
புவாவின் வழக்கு பற்றி புவாவின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவும் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரும் வெவ்வேறு விதமாக விளக்கமளித்திருப்பது பற்றித் தமக்குத் தெரியாது என்றும் அவர் சொன்னார்.
அது மட்டுமா? அண்மையில் கிளந்தானில் வெள்ளம் வந்தது கூட ‘நம்மவர்’ களுக்குத் தெரியாதே…
அரும்மை யாக சொன்னேர்
தடி எடுத்தவன் தண்டல்காரன் ….வழிமுறை > சட்டதிட்டம் எல்லாம் வறியோருக்கு மட்டுமே > இங்கே “”என்ன தெரியும் ?” என்பதை விட “”யாரை தெரியும் ” என்ற பாலிசிதான் பரவி கிடக்கிறது …
தடம் புரண்ட கவரி மான்
சாக்கு சொல்ல தெரியாதா இவன்களுக்கு? மேற்கு நாடுகளில் இது போல் நடந்தால் -மறு கணமே வீட்டுக்கு அனுப்பிவிடுவர். இங்கு இனவாதமும் மதவாதமும் ஜால்ராவும் சேர்ந்து நெருப்பு கோழியானதுதான் மிச்சம்.
சரிப்பாஅப்ப தெரியாது. இப்ப தெரிஞ்சது என்ன பண்ண போறப்பா? எதிர் கட்சி காரன் தும்முனாலே புடிச்சு கேஸ் போடுறே? இவனை என்ன பண்ண போறிங்கன்னு பாகத்தான் போறோம்.இப்பவரைக்கும் ஒன்னும் நடக்கலே.
ஆளும் கட்சியில் … மர மண்டைகள் இருந்தால் இதான் நடக்கும் !!!!!!!!!!
13வது பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்பட்டது பற்றி ஆயுதப்படைகள் மன்றத்தின் ஒப்புதலின்றி ஊடகங்களிடம் பேசியதற்காக மேஜர் ஜைடி அஹ்மட் ஆகாயப்படையிலிருந்து நீக்கப்பட்டது அவருக்கு ஏற்ற ஒரே தண்டனை என்றால் சூதாட்ட மன்னர் பால் புவா குறித்து அமைச்சரவைக்கு முன்கூட்டியே தெரிவிக்காமலும் அதற்குப் பின்னரும் அது பற்றி அமைச்சரவைக்கு விளக்காமலும் தன்னிச்சையாக செயல்பட்ட இவனுக்கு என்ன தண்டனை? அரசு பாரபட்சமின்றி நடக்குமா? என்ன நடக்கும் என்று ஆவலோடு காத்திருப்போம்.
சூதாட்டம் என்பது புனிதமான தொழில் என்று சட்டத்தில் திருத்தம் செய்து விட்டால், உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அமெரிக்க அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதில் தவறில்லையே என கூறி முஸ்லிம்கள் தலை மயிரை பிய்த்து கொள்ளும் அளவுக்கு கொண்டு செல்ல போகிறது BN அரசாங்கம்.