வழக்குரைஞர் எரிக் பால்சன் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவதற்கு அம்னோ கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்பது தவறு என்கிறார் அக்கட்சி உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன்.
பலரையும் போலவே பால்சனும் கூறுவது அம்னோவுக்கு எதிராக “எதிர்மறையான கருத்தை”த் தோற்றுவிக்கிறது என்று ஹிஷாமுடின் கூறினார்.
“எதிர்மறையான விவகாரங்களுக்கு அம்னோமீது பழி போடுவது சில தரப்புகளுக்கு வாடிக்கையாக போய்விட்டது.. அவர்கள் அதை நிறுத்தப்போவதில்லை.
“அம்னோவில் உள்ள நாங்கள் ஒன்றுபட்டு உழைத்து இப்படிப்பட்ட கூற்றுகள் தவறு என்பதை நிறுவுவோம்”, எனத் தற்காப்பு அமைச்சருமான ஹிஷாமுடின் தெரிவித்தார்.