13வது பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்பட்டது பற்றி ஆயுதப்படைகள் மன்றத்தின் ஒப்புதலின்றி ஊடகங்களிடம் பேசியதற்காக மேஜர் ஜைடி அஹ்மட் ஆகாயப்படையிலிருந்து நீக்கப்பட்டார்.
பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மையை எளிதில் அழிக்க முடிகிறது என போலீசில் புகார் செய்ததற்காக அவர்மீது இராணுவ நிதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இன்று இராணுவ நீதிமன்ற நீதிபதி கர்னல் சாடோன் ஹஸ்னான் தீர்ப்பளித்தார்..
சாடோன் தம் தீர்ப்பில் ஜைடி 26 ஆண்டுகள் ஒரு நாள் படையில் அப்பழுக்கற்ற சேவையாற்றி யிருப்பதாகக் குறிப்பிட்டார். ஒருமுறைகூட அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
“இங்கே அழியா மை பிரச்னை அல்ல. அவர் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்ததுதான் பிரச்னையாகும்”, என்றார்.
இக்குற்றத்துக்கு கூடினபட்ச தண்டனை ஈராண்டுச் சிறை அல்லது அவமானத்துக்குரிய முறையில் பதவிநீக்கம் செய்தல்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜைடி, தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்போவதில்லை என்றார்.
இதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை -நீதி நியாயம் எல்லாவற்றிற்கும் சமாதி கட்டி வெகு நாட்கள் ஆகிவிட்டன.