எல்எப்எல் இயக்குனர் எரிக் பால்சன் இன்று பிரிக்பீல்ட்ஸ்சில் கைது செய்யப்பட்டார். அவரது கைது இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று அவர் செய்திருந்த டிவிட்டுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
தேச நிந்தனைச் சட்டம் செக்சன் 4 இன் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக லத்தீபா கோயா மலேசியாகினியிடம் கூறினார்.
இதனை இன்றிரவு மணி 9.40 அளவில் போலீஸ் தலைவர் காலிட் அபு பாகார் டிவிட்டின் வழி உறுதிப்படுத்தினார்.
பால்சனை 20 போலீசார் கைது செய்தனர் என்று எல்எப்எல் கூறிற்று. இது தேவையற்றது என்பதோடு போலீஸ் வளங்களை வீணடிப்பதாகும் என்று அது டிவிட் செய்தது.
நாளைக்கு புக்கிட் அமானுக்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்க பால்சன் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் தெரிவித்தார்.
போலீசார்பால்சனை அவரது வழக்குரைஞர் நிறுவனமான டயம் & காமிணிக்கு அழைத்துச் சென்று அங்கு அவரது கணினியை கைப்பற்றினர்.
இது மனித உரிமைகளுக்கான ஒரு வழக்குரைஞருக்கு எதிராக இழைக்கப்பட்ட மட்டு மீறிய, அச்சமூட்டும் செயலாகும்.