அல்தான்துயா கொலை: அஸிலா, சிருல் மரண தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

Altantuyaverdictmurder1பெடரல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளின் அமர்வு அல்தான்துயா கொலை மேல்முறையீட்டில் அஸிலா மற்றும் சிருல் ஆகியோரை கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து அவர்கள் குற்றவாளிகள் என இன்று காலையில் தீர்ப்பளித்தது.

பெடரல் நீதிமன்றத்தின் ஒருமித்த தீர்ப்பை நீதிபதி சுரியாடி வாசித்தார்.

“அரசு தரப்பு அதன் வழக்கை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, மரண தண்டனையை நிலைநிறுத்தி இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது”, என்று அரசு தரப்பின் மேல்முறையீட்டை அனுமதித்த நீதிபதி கூறினார்.

குற்றவாளிகளில் ஒருவரான சிருல் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவரை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்குமாறு அரசு தரப்பு வழக்குரைஞர் துன் மஜிட் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

நீதிபதி அரிப்பின் பிடி ஆணை பிறப்பிக்க ஒப்புக் கொண்டார்.