சமூக ஆர்வலர் ஏரிக் பால்சன் நேற்றிரவு கைது செய்யப்பட்டதை “அரசியலாக்க வேண்டாம்” என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் எல்லாத் தரப்பினரையும் எச்சரித்துள்ளார். கடந்த வாரம் டிவிட்டரில் செய்திருந்த ஒரு பதிவுக்காக அவர் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
“பல்லினச் சமுதாயத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்காக சட்டப்படியாகத்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்”, என காலிட் ஓர் அறிக்கையில் கூறினார்.
பால்சன், கடந்த வாரம் டிவிட்டரில் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்” வெளியிடும் சமய உரையின்வழி தீவிரவாதத்தை ஊக்கிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.