சூதாட்ட மன்னர் என அழைக்கப்படும் பால் புவாவுக்கு ஆதரவாக அமெரிக்க புலனாய்வுத் துறை)எப்பிஐ)க்கு உள்துறை அமைச்சர் அனுப்பிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்தவர்கள் அமெரிக்க அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள்.
மற்றபடி அஹமட் ஜாஹிட் ஹமிடி எழுதிய கடிதத்துக்கு ஆட்சேபம் தெரிவித்ததில் புத்ரா ஜெயாவுக்கு எந்தத் தொடர்புமில்லை என லாஸ் வேகாஸில் உள்ள ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
துணைப் பிரதமர் முகைதின் யாசினும், தமக்கு அக்கடிதம் பற்றி எதுவும் தெரியாது என்று நேற்று கூறியதன் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அக்கடிதம் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டது என்பதால் அதை ஓர் ஆதாரமாக ஏற்பதற்கு அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அப்போது “அரசாங்கம்” எனக் குறிப்பிடப்பட்டதால் அது மலேசிய அரசாங்கத்தைக் குறிப்பிடுவதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், அவர்கள் குறிப்பிட்டது அமெரிக்க அரசாங்கத்தை.