“என் மகள் எதற்காகக் கொல்லப்பட்டாள்?”
அக்கொலைக்காக கூட்டரசு நீதிமன்றம் இரு போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியிருந்தாலும் இந்தக் கேள்விக்கு விடைதெரியாமல் தவிக்கிறார் ஸ்டீவ் ஷரீபு.
கொலையாளிகள் இருவரும் செய்த குற்றத்துக்காக தூக்கில் தொங்கப் போகிறார்கள் என்பதை அறிந்து தம் துணைவியாரும் அல்டான்துன்யாவின் மகன்கள் இருவரும் ஒரளவு திருப்தி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“ஆக, வழக்கு முடிவுக்கு வந்து விட்டது. இனி, நான் மலேசிய அரசாங்கத்தின்மீதும் அவரின் மரணத்துக்குக் காரணமான அவ்விரு அதிகாரிகளின்மீதும், அல்டான்துன்யா மரணத்தின்போது அவர்கள் அரசாங்க அதிகாரிகள்தானே அவர்கள்மீதும் சிவில் வழக்கைத் தொடரலாம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆனாலும், 2006, அக்டோபர் 19-இல், ஷா ஆலம் புஞ்சாக் ஆலமில் ஒரு காட்டுப் பகுதியில் அல்டான்துன்யா கொல்லப்பட்டதற்கு, வெடிமருதுகளால் அவரது உடல் சிதறடிக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டீவ்.
வெடி மருந்துகள் வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்த்திருப்பார்கள்! இந்த அளவுக்கு அது வேலை செய்யும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை!
இதிலிருந்து தெரிகிறதே நம்முடைய நீதி இந் நாட்டில் எந்த நிலையில் இருக்கின்றது என்று.
“வழக்கு முடிவுக்கு வந்து விட்டது. இனி, நான் மலேசிய அரசாங்கத்தின் மீதும் அவரின் மரணத்துக்குக் காரணமான அவ்விரு அதிகாரிகளின் மீதும், அல்டான்துன்யா மரணத்தின்போது அவர்கள் அரசாங்க அதிகாரிகள்தானே அவர்கள் மீதும் சிவில் வழக்கைத் தொடரலாம்”,
சபாஷ் !!! அப்படி போடு அருவளே !!!
ஏன் கொல்லப்பட்டார் ? என்ற கேள்வியை என் தலைவன் பிரதமரிடம் கேட்டால், விவரமாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட போகிறார். இதற்கு போய் புலம்பி கொண்டிருக்கிறீர்கள்.
ஏன் கொல்லப்பட்டார் ? என்ற கேள்வியை என் தலைவன் பிரதமரிடம் கேட்டால், விவரமாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட போகிறார். இதற்கு போய் புலம்பி கொண்டிருக்கிறீர்கள்.
மகள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாள் என்று முதலில் அறிந்து கொள்ளும் தந்தையரே..
அல்தாந்துயா விலைமாதக இருக்கட்டுமே. அதற்காக உங்கள் தலைவர்களோடு படுக்க வில்லையென்றால், C4 வெடி வைத்து கொன்று விடுவீர்களோ. நல்ல வேலை நடிகை ‘நக்மா’ தப்பித்தார்.
நக்மாவுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு ஹோட்டலில் காத்திருந்த BN தலைவர்கள் எத்தனை பேர் என்று நம்ம புரோக்கர் நல்லகருப்பனை கேட்டால் தெரிந்து விட போகிறது.
ஏய்தவன் மறைந்திருக்க,அம்புக்கும் மானுக்கும் என்ன தான் பகை,தெய்வம் நின்று கொல்லும்!
SHANTI மகள் என்ன பேழை செய்தால் என்ன ,அதுவும் ஒரு உயிர்தானே ,?பணம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் SHANTHI போன்றவர்களும் இந்த வேலைதான் செய்வார்கள்
அவள் என்ன வேலை செய்தாள் என்பது ‘இவளுக்கு’ (சாந்திக்கு) தெரிந்தால் சொல்லலாமே. ஒருவேளை இவளுடன் தான் அவள் அந்த வேளை..அந்த வேலை செய்தாளோ…அப்படின்னா இவளுக்கும் ஒரு குண்டு ரெடி
இதில் அவிழ்க்க முடியாத பல முடிச்சுகள்..பதிலே இல்லாத பல கேள்விகள்..
1. முதலில் அல்தான்துன்யா என்று ஒருவர் நாட்டுக்குள் நுழையவே இல்லை என்றார்கள்..அது ஏன்?
2. பின்னர் வெடிவிபத்தில் உயிர் இழந்தவர் அல்தாந்துன்யா தான் என்றார்கள். நாட்டுக்குள் நுழையாத ஒருவர் எப்படி இங்கே இறந்திருக்க முடியும்?
3. ராணுவ பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடிய வெடி குண்டு எப்படி குற்றவாளிகள் என்று குற்றம் சாட்ட இவர்களுக்குக் கிடைத்தது? ஒருவேளை Pasar. Malam. இல் கிடைத்திருக்குமோ?
4. குற்றமற்றவர்கள் என்றும் நிரபராதிகள் என்றும் ஒரு நீதிமன்ற விசாரணையில் விடுவிக்கப்பட்ட இவர்கள் அடுத்தொரு நீதிமன்ற விசாரணையில் கொலை செய்தவர்கள் இவர்கள் தான் என்று தீர்ப்பு சொல்லப்பட்டால் – அந்த தீர்ப்பை மக்களும் உலகமும் ஏற்றுக்கொள்ள்வதாக இருந்தால், மற்ற பல வழக்குகளில் குற்றமே செய்யாத ஒருவர் வக்கீலின் ‘வாத’ திறமையால் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவாரேயானால் – அவருக்கு வக்கீல் வைத்து வாதாட முடியாத சூழ்நிலையில் செய்யாத குற்றத்துக்கு தண்டனை பெறுவார் அல்லவா? இதுவரை எத்தனையோ நிரபராதிகள் இப்படி தண்டிக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்படியானால் சட்டம் என்பது எதற்கு? யாருக்கு? பொய்யான அல்லது தவறான நீதியும் வழங்கப்டும் சாத்யமும் உள்ளது என்றால் நீதிமன்றம் தான் எதற்கு?
சாந்திக்கும் > அரசாங்கத்துக்கும் வேண்டுமானால் அவள் சரியில்லாதவளாக இருக்கலாம் > ஆனால் எந்த பெற்றோருக்கும் எந்த நிலையில் இருந்தாலும் மகள் மகளே //