அல்டான்துயா ஷரீபு கொலையில் இரண்டாவது குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்த சிருல் அஸ்ஹார் உமர் வெளிநாட்டில் இருப்பதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
அவரிடம் மலேசியா திரும்புவதற்குப் பணமில்லை. அதனால்தான் இன்று காலை அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி அச்செய்தியை வெளியிட்டிருந்த தேசிய செய்தி நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் சிருல் தீர்ப்பளிக்கும் நாளை அறிந்தே இருந்தார் எனக் கூறிற்று.
ஆனால், சிருல் எங்கு இருக்கிறார் என்பதை அது தெரிவிக்கவில்லை.
அக்கொலைக் குற்றத்துக்காகக் கூட்டரசு நீதிமன்றம் அவருக்கும் இன்னொரு போலீஸ்காரரான அஸிலா ஹட்ரி-க்கும் மரண தண்டனை விதித்தது.
எல்லாம் முன்னேற்பாடு தான்! அவ்வளவு சீக்கிரத்தில் தண்டனைக் கொடுத்துவிட முடியுமா! மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்தோனேசியாவில் இருப்பார்!
அம்புலிமாமா கதைப் புத்தகங்களை இனிமேல் காசு கொடுத்து படிப்பதைவிட, நம் நாட்டில் நடக்கும் இதுபோன்ற கூத்துகள் இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது.
பணமில்லையா ? BN அரசாங்கத்தின் ‘BRIM’ லஞ்ச உதவி தொகை கொடுத்து, சிருல் அஸ்ஹார் உமர் நாடு திரும்ப உதவி செய்யலாமே!
பணமில்லை என்பதில் உண்மை இல்லை. நான் என் தலைவன் பிரதமருடன் வெளிநாட்டில் GST (GOLF SHOPPING TRAVEL) முடித்து கொண்டு நாடு திரும்பலாம் என்று நினைத்து கொண்டிருக்கையில், தயவு செய்து இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பாதீர்கள்.