மரினா பேச்சுக்கு பொதுப் பல்கலைக்கழகம் தடைபோட்டது

marinaஒரு  பொதுப்  பல்கலைக்கழகத்தின்  மாணவர்கள்  சமூக  ஆர்வலர்  மரினா  மகாதிரைச்  சொற்பொழிவாற்றுவதற்காக அழைத்திருந்தார்கள்.

ஆனால்,   மரினாவுக்கு  பல்கலைக்கழக வளாகத்துக்குள்  நுழைய  அனுமதி  இல்லை  என்று பல்கலைக்கழக  மாணவர்  விவகாரத்  துறை  அவர்களிடம் கூறிவிட்டது.

“அரசாங்கப்  பல்கலைக்கழகம்  ஒன்று  எனக்குத்  தடைபோடுவது  இது  ஐந்தாவது  தடவையாகும். நான் மிகவும்  சக்தி  படைத்தவள்போலும்”, என்றவர்  முகநூலில் பதிவிட்டிருந்தார்.

“பரவாயில்லை.  நாளை ஒரு  தனியார்  கல்லூரியில்  பேசுகிறேன். இந்த  நிகழ்வை இரத்துச்  செய்ய  வேண்டிய  கட்டாயத்துக்கு  ஆளான  பல்கலைக்கழக  மாணவர்கள்  நாளை  அந்நிகழ்வுக்கு  வரலாம். என்னுடன்  உரையாடலாம்”.

அவரது  வருகைக்குத்  தடைபோட்ட  பல்கலைக்கழகம்  எதுவென்பதை  மரினா கடைசிவரை  குறிப்பிடவில்லை.