செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து தமிழர்களுக்கும் மலேசியர்களுக்கும் அதன் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து தமிழர்களுக்கும் மலேசியர்களுக்கும் அதன் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது
நண்பா!
பொங்கலோடு பொங்கல், பொங்குவதை நிறுத்தி விடாதே!
நம் உள்ளமும் சேர்ந்தே பொங்க வேண்டும்.
நான் யார்?, என் வரலாறு என்ன?,
என் கலச்சாரம் யாது?, என் மொழி என்ன?,
என் வழிபாடு என்ன?
என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு
உன் முகவரியை தேடிப்பார்
அடுத்த வருட பொங்கல்
சக்கரை சேர்க்கா விட்டாலும்
இனிய பொங்கல்தான்.
தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் தொண்டாற்றும் செம்பருத்தி நிர்வாக குழுவினற்கும், பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய, தமிழ் புத்தாண்டோடு,
பொங்கல் திருநாள் வாழ்தையும் சேர்த்தே சமர்பிக்கின்றேன்.
இப்படிக்கு
உழவர்.
எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் உழவர் பெருமக்களுக்கும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உழவர், தமிழன் அவர்களுக்கும் இன்னும் ஏனைய செம்பருத்தி வாசகர்களுக்கும் சிறப்பான பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். செம்பருத்தி குழும சேவையாளர்களுக்கும் எமது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அணைத்து தமிழர்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் . அனைவரது வாழ்விலும் இன்பம் மலரட்டும் .
குறிப்பு : 15/1/15 அன்று ஈப்போ மகா மாரியம்மன் அலைய மண்டபத்தில் ” தமிழிசை நிகழ்வு ” நடைபெறவுள்ளது . ஈப்போ வாழ் அன்பர்கள் சிரமம்பராமல் கலந்து சிறப்பிக்கவும் . நன்றி செம்பருத்தி.
நானும் சேர்ந்துகொள்கிறேன், பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சார் என்னக்கு ஒரு டௌட் ?பொங்கல் தமிழ் புத்தாண்ட?சித்திரை தமிழ் புத்தாண்டா?இதுல எது சார் தமிழ்புத்தாண்டு?
ஐயா, தை முதல் நாள் தான் தமிழ் வருட பிறப்பு , இது 90 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் சான்றோர்கள் (சுமார் 500 பேர் ) ஒன்று கூடி ஒருமனதாக எடுத்த முடிவு . தமிழ் நாட்டில் இருந்த ஆட்சியாளர்கள் இதை நடைமுறை படுத்த வில்லை . என்ன செய்வது அணைத்து ஆட்சியாளனும் ஆரிய பற்றாளனாக அல்லது தைரியம் இல்லாதவனாக இருந்ததே காரணம் .
இறுதியாக சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி நடைமுறை படுத்தி அரசு விடுமுறை ஆகினார் அனால் பின் வந்த வந்தேறி ஆரிய ந…இ மறுபடியும் சித்திரையை புத்தாண்டு ஆக்கினாள் !!!
ஐயா….தை முதல் நாளே நம் புத்தாண்டு ……தெளிவாக கொண்டாடுங்கள் ……..
தயவு செய்து அனைவருக்கும் இதை கூறுங்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
உழவர்கள் சேற்றில் கை வைவைப்பதால் நாம் சோற்றில் கை வைக்கிறோம்,பொங்கும் தமிழனுக்கு புத்தாண்டு,கூறுவதில் மகிழ்ச்சி, செம்பருத்தி கொம் ஆசிரியருக்கும்,அதன் குழுவினர்களுக்கும் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
தேனீ ஐயா , உங்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் .
செம்பருத்தி இதழ் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் , செம்பருத்தி வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ….
உழவன் அவர்களின் கருது பிரமாதம் ,,,வாழ்த்துகள் ஐயா
என் இனிய பொங்கல் நல் வாழ்துக்கள்
கடந்த ஞாயிற்றுக் கிழமை டிவி 2ல் வசந்தம் நிகழ்ச்சியில் மலேசிய சைவ சமய பேரவை தலைவர் முனைவர் ஆறு நாகப்பன் ஐயா அவர்கள் பொங்கல் திருநாள் பற்றியும் புத்தாண்டு பற்றியும் விளக்கம் அளித்தாரே. புயல் பார்க்கவில்லையோ?
“சார் என்னக்கு ஒரு டௌட் ?பொங்கல் தமிழ் புத்தாண்ட?சித்திரை தமிழ் புத்தாண்டா?இதுல எது சார் தமிழ்புத்தாண்டு?” புயல் அவர்கள் கேட்டிருக்கிறார். இதற்க்கு என் பதில் : ஆரமிசிடைங்கயா ஆரமிசிடைங்கயா …. இதோட நிறுத்தவே மாட்டாஇங்க்க…..
மீண்டும் ஒரு புயலா?
தமிழர் பெருமக்களுக்கு சமர்ப்பணம்:
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு –
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே
மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
பொண்ணை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் –
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளயட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே –
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேகரித்தால் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
http://youtu.be/4sOsjfFTH_0
பொங்கலோ பொங்கல். பொங்கல் தமிழ் புத்தாண்டு.
தமிழ் நாட்டிலேயே கருணாநிதி சட்டம் தீட்டியும் ஒரு பயல் பொங்கலை
புத்தாண்டு என ஏற்க வில்லை ?? அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ் பித்தர்கள் சிலர் கூப்பாடு போட்டதோடு சரி..> ஆகா மொத்தத்தில் பொங்கல் பொங்கியது > 3 மாதம் கழித்து சித்திரையில் பஞ்சாங்கம் வாசித்து புத்தாண்டையும் கொண்டாடிவிட்டனர் > அதே தான் 2015 லும் நடக்கும் /////
பொங்கல் பெருநாளை கொண்டாடும் அணைத்து உலக மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் .
உலகில் கல் தோன்றா, மண் தோன்றா காலம் தொட்டே தமிழன் வாழ்ந்துள்ளான் என படித்துள்ளேன். ஆனால் தமிழனின் புத்தாண்டு எது என்றே தமிழனுக்கு இன்னும் தெரியவில்லை. இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு இந்த சர்ச்சை ஓயாது. எல்லாமே நண்டு கதைதான். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இது உழவர்களுக்கு நன்றி கூறும் திருநாள்
உழவர் பெருமக்களுக்கு உலகமே நன்றி கடன் பட்டுள்ளது .
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எல்லோரும் மனமகிழ்வுடன் கொண்டாடுவோம் .
உலக தமிழர்கள் வளமுடன் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்
தமிழர்களிடம் தமிழில் பேசுவோம் .நன்றி .வணக்கம் .
inthuDharman …அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்…ஆயிரம் வருடம் முன் ஏமாற்ற பட்டு திணிக்க பட்ட ஒன்றை உடனே மாற்றுவது சிரமம் தான் ஆனால் முடியாதது அல்ல.
மாற்றத்தை கண்கூடாக காண முடிகிறது , இது போதும் முதல் அடிக்கு . தமிழர்கள் தமிழர்களாக வாழும் நாள் வெகு தூரமில்லை . தமிழ் நாட்டில் மாற்றம் ஏற்பட்டதோ தெரிய வில்லை ஆனால் மலேசியாவில் மாற ஆரம்பித்துவிட்டார்கள் தமிழர்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னார்களே தவிர சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லவில்லை , ஏன்????
tamilan மிக்க நன்றி! அவர் தமிழர் என்றல் நீங்கள் சொல்வது புரியும்…..
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்…நம் இனத்தைப் பற்றியும், மொழியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத – புரிந்து கொள்ள சரியான வழிமுறைகள் இல்லாத சூழ்நிலையில் நாம் நம் சந்ததிக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்? வெறும் குழப்பத்தையும் கேள்விக் கணைகளையுமா?
ஒரு பக்கம் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்கிறான் ஒருத்தன். அடுத்தவனோ இல்லை…சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிறான். உண்மையில் தை முதல் நாள் உழவர் திருநாளா? தமிழ்ப் புத்தாண்டா?
ஒரு சிலர் பொங்கல் என்பதைக் கூட ‘பொங்கள்’ என்று எழுதுகிறார்கள்.
இன்று ஒருவன் ;விழுதுகள்’ நிகழ்ச்சியில் சொல்கிறான்..(வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில்) ஏன் வாழை மரம் கட்டுகிறோம்…? ஆலமரம் கட்ட முடியாததால் வாழைமரம் கட்டுகிறோம் என்று.
உண்மையில் ஆலமரம் கட்ட முடியாததால் தான் வாழைமரம் கட்டுகிறோமா? இப்படி நம் சந்ததியை நாமே குழப்புவது சரியா?
பொங்கல் முதல் நாள் ‘போகி’ என்று சொல்லி ஒருசிலர் (பலர்) வேண்டாத பழையனவற்ற வீட்டு முன் எரிக்கிறார்கள். இது தவறு அப்படி ஒரு சம்பிதரதாயம் இல்லை என்கிறார்கள் ஒரு சிலர். அப்படி ஒரு சம்பிரதாயம் இல்லை என்றால் பொங்கலுக்கு ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற சுலோகம் ஏன் வந்தது என்றும் சிலர் கேட்கிறார்கள்.
இந்துமதமும் சம்பிரதாயமும் வெறும் குழப்பம் நிறைந்ததா? நாமே பல கேள்விகளுக்கும் பல குழப்பங்களுக்கும் விடை காண முடியாத சூழ்நிலையில் நம் சந்ததிக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்? வெறும் குழப்பத்தையும் கேள்விக் கணைகளையுமா? இதை ஆணவத்தாலோ அதிமேதாவித் தனத்தாலோ நான் கேட்கவில்லை. தெளிவு பெற விரும்புகிறேன்.
பொங்கல் பண்டிகை என்பது ஒரு மதசம்பந்தமான பண்டிகையல்ல , எல்லா தமிழர்களும் மகிழ்ச்சியோடு சமய வித்தியாசமில்லாமல் கொண்டாடும் தமிழர் திருநாள்.விசேஷமாக உழவர்கள் மகிழும் உழவர் திருநாள். வேர்வை சிந்தி நிலத்தில் உழைக்கிற உழவர்கள் மகிழ்ந்து , தங்கள் நிலங்களை மழையினாலும் , பனியினாலும் ஆசிர்வதிக்கிற இறைவனுக்கு நன்றி சொல்கிற நாள்தான் இன்ட பொங்கல் திருநாள். இறைவன் மனிதனை உண்டாக்கினபோது அவனுக்குக் கொடுத்த முதல் வேலை உழவு வேலைதான் என்று வேதம் சொல்கிறது. எற்றக்காலட்தில் தேசத்தில் மழையை பெய்யபண்ணி, களஞ்சியங்களை தானியத்தினால் நிரம்பபண்ணுகிற
இறைவனுக்கு நன்றி சொல்கிற நாள்தான் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் . இதைத்தான் கிருஸ்தவ ஆலயங்களில் அறுப்பின் பண்டிகை அதாவது அறுவடை பண்டிகை என்று கொண்டாடபடுகிறது. தேசத்தில் பயிரிடப்பட்ட அறுவடை செய்யும்போது , அறுப்பின் முதற் பலனாகிய ஒரு கதிர்க்கட்டை தேவாலயத்திற்கு கொண்டு வந்து கர்த்தருடைய சந்திதியில் அசைவாட்ட வேண்டும் ” என்று வேதப்புத்தகத்தில் எழுதபட்டிருக்கிறது. ஒரு தேசம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமானால் விளைநிலங்கள் ஆசிர்வதிக்கப்பட்டு விளைச்சல்கள் பெருக வேண்டும். உழவர்கள் பாதிக்கபட்டால் தேசமே பாதிக்கப்படும்.
அரசாங்கம் விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும் ! விவசாயிகள் மகிழ்ச்சியோடு விவசாயம் செய்ய உதவிகள் செய்து உற்க்காகபடுத்த வேண்டும் ! இந்த பொங்கல் திருநாளில் விவசாய பெருமக்கள் ஆசிர்வதிக்கப்பட , விளைநிலங்கள் ஆசிர்வதிக்கபட்டு விளைச்சல்கள் பெருக இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் .
“விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து , அதை பெருகபண்ணி, உங்கள் நீதியின் விளைச்சல்களை வர்திக்கச் செய்வார் .” ஆமென் ..!!
அணைத்து தமிழர்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டுடன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் . ‘தேனீ ஐயா,உங்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் “
இல்லாத,முடியாத என்று சொன்னால் நீங்கள் முயற்சி செய்ய வில்லை என்றே அர்த்தம்.தமிழர் அறிவியல் வளர்ச்சி மிகவும் தொன்மையானது. பூமியில் முதல் இனமாக தமிழனை படைத்த இறைவன் முட்டாள் அல்ல! ஆகையால் தேடுங்கள்! மூச்சு இருக்கும் வரை தேடுங்கள்! எண்ணற்ற அதிசயங்களை காண்பது உறுதி!
தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் வரலாறு
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது.இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது.மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது.இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. ப்போது,பொங்கல்,தைப்பொங்கல்,மாட்டு பொங்கல்,காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால்,அந்த காலத்தில் 28நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.இப்போது பொங்கல் ஊரையும்,நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது.நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைப்பெற்றது.இவ்விழா நாளில் பகைமை,பசி,நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது.மழைக்குரிய தெய்வம் இந்திரன்,அவனை வழிபட்டால்,மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை.பிற்காலத்தில்,சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து,தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுள் பொங்கல் படைத்து வழிபட்டனர்.பூமி இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று,ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது.தாங்கள் அறுவடை செய்த புது நெல் தை முதல்நாளில் சமையல் இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.
வணக்கம் செம்பருத்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்…!
என் இனிய தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ,தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ,
மலேசிய மக்கள் அனைவர்க்கும் என் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்;
l