கிளந்தானில் வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு தற்காலிகமாக கொள்கலன் வீடுகளை உருவாக்கிக் கொடுக்க பெர்துபோஹான் பெலிண்டோங் கஜானா (பெக்கா) என்னும் அமைப்பு தீர்மானித்துள்ளது.
500 சதுர அடி கொண்ட ஒரு கொள்கலன் வீடு இரண்டு குடும்பங்கள் தங்குவதற்கு ஏற்ப ஒரு கழிப்பறை, இரு அறைகள், ஒரு கூடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
கொள்கலன்களை வீடுகளாக உருமாற்றும் வேலை கிள்ளானில் மேற்கொள்ளப்படும். ஒரு கொள்கலன் வீட்டை உருவாக்கவும் கிளந்தான் கொண்டு செல்லவும் ரிம15,000 செலவாகும் என பெக்கா கூறிற்று. மார்ச் இறுதிக்குள் 30 வீடுகளை உருவாக்குவதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட முடியும் என நம்புகிறது.