இஸ்லாத்திற்கு மாறிய வீரன் தடைஉத்தரவு பெற்றார்

Convert viranfederalcourt1இஸ்லாத்திற்கு மாறிய என். வீரன் என்ற இஸ்வான் அப்துல்லாவுக்கும் அவரது முன்னாள் மனைவி எஸ். தீபாவுக்கும் இடையிலான குழந்தைகள் பராமரிப்பு வழக்கில் தீபாவுக்கு சாதகமாக சிரம்பான் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு எதிராக தடைஉத்தரவு கோரி இஸ்வான் பெடரல் உச்சநீதிமன்றத்திடம் செய்திருந்த மனுவை பெடரல் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டு தடைஉத்தரவு பிறப்பித்தது.

குழந்தையை மீட்பதற்கான உத்தரவுக்கும் பெடரல் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், இன்று காலை இஸ்வான் அவரது ஆறு வயது மகனை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் தடைஉத்தரவு விதிக்கப்பட்டது.

இத்துடன், மகன் இஸ்வானின் பராமரிப்பிலும், மகள் அவரது முன்னாள் மனைவி எஸ். தீபாவின் பராமரிப்பிலும் இருப்பர்.

இத்தீர்ப்பை மலாயா தலைமை நீதிபதி ஸுல்கிப்லி அஹமட் மக்கினுடின் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு அளித்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு விரைவாக ஒரு தேதியை நிர்ணயக்கவும் அவர் உத்தரவிட்டார்.