எப்பிஐ-க்கு எழுதிய கடிதம் பற்றி ஜாஹிட் அளித்த விளக்கத்தை அமைச்சரவை ஏற்றது

letterசூதாட்ட  மன்னர்  என்று  அழைக்கப்படும்  பால்  புவாவுக்கு  ஆதரவாக  தாம்  அமெரிக்கப்  புலனாய்வுத்  துறைக்கு  எழுதிய கடிதம்மீது  உள்துறை  அமைச்சர் ஜாஹிட்  ஹமிடி-இன்  விளக்கத்தை  அமைச்சரவை  ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அவ்விவகாரம்   பற்றி  ஜாஹிட்  அண்மைய  அமைச்சரவைக்  கூட்டத்தில்  விளக்கியதாக  வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்  இன்று  தெரிவித்தார்.

ஆனால், என்ன  விளக்கமளித்தார்  என்பதை  அவர்  விவரிக்கவில்லை. அதை  உள்துறை  அமைச்சரிடமே  கேட்டுத்  தெரிந்து  கொள்ளுங்கள்  என்றார்.