மங்கோலிய பெண் அல்டான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான போலீஸ் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியா சென்றதாக தெரிய வந்துள்ளது.
குடிநுழைவுத் துறையினருடன் விசாரித்துப் பார்த்து அதைத் தெரிந்து கொண்டதாக கோலாலும்பூர் சிஐடி தலைவர் முகம்மட் சாலே கூறினார்.
“மலேசிய குடிநுழைவுத் துறை அவர் வெளிநாடு சென்றதைக் குறிப்பாக ஆஸ்திரேலியா சென்றதை உறுதிப்படுத்தியுள்ளது.
“அவர் அங்குதான் உள்ளாரா என்பதை அறிய ஆஸ்திரேலிய போலீசுடன் தொடர்பு கொள்வோம். அவர் வேறெங்கும் போயிருந்தால் அவரைக் கைது செய்ய இண்டர்போலை நாடுவோம்”, என்றாரவர்.
நம் நாட்டு நீதித்துறை நாடகமாடுவதற்கு ஒரு அளவே இல்லையா? நீதிமன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்திற்கு வரச்செய்ய நோடீஸ் அனுப்பவேண்டும். அந்த நோட்டீசில் நீதிமன்றத்திற்கு வரவேண்டிய சம்பந்தப்பட்ட அந்த ஆசாமி கையெழுத்திடுவார். இதுதான் நடைமுறை. அவரின் கையெழுத்து கிடைக்காத பட்சத்தில் அவர் எங்குமே இல்லை என்றாகிவிடுகிறது. ஆக, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இத்தகைய சூழலில் அவர் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பினை நீதிபதிகள் வெளியாக்கியுள்ளனர் என்பதால், சம்பந்தப்பட்ட அந்த குற்றவாளியை தப்பிக்கச் செய்ததில் நீதிபதிகளுக்கும் பங்குண்டு என்கிற சந்தேகமே எழுகிறது. அல்தாந்துயா நஜிப்பின் ஆட்சியில், காயம்பட்ட கைக்கு மருந்து கேட்டால், காலுக்கு மருந்து கொடுப்பதென்பது இயல்பாகிவிட்டது.
எருமைகள் இண்டர்பூலையா நாடிட்டாலும் ?
போய் விட்டாரா இல்லை அனுப்பி விட்டீரா? ஹ்ஹ்ம்ம்ம்