உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, அமெரிக்கப் புலனாய்வுத் துறைக்கு எழுதிய கடிதம் பற்றி இதுவரை கடைப்பிடித்து வந்த மெளனத்தைக் கலைத்திருக்கிறார். அமெரிக்காவில் வழக்கை எதிர்நோக்கியுள்ள பால் புவாவைப் பாதுகாக்கும் நோக்கில் அதைத் தாம் எழுதவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
பால் புவாவின் நிலையையும் மலேசியாவில் 14கே இரகசியக் கும்பல் செயல்படுகிறதா என்பதையும் தெளிவுபடுத்துவதே அக்கடிதத்தின் நோக்கமாகும் என்றாரவர்.
“பால் புவாவின் நிலையைத் தெளிவுபடுத்தவே எப்பிஐ-க்குக் கடிதம் எழுதினேன். அது எதிரணி-ஆதரவு செய்தித்தளங்களில் கூறப்பட்டிருப்பதுபோல் பால் புவாவுக்கு ஆதரவாக எழுதப்பட்ட கடிதம் அல்ல”, என்று ஜாஹிட் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
எருமை(கள்) என்ன சொன்னாலும் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
பொய்யை உண்மை என்று அழுத்தம் திருத்தமாக கூறும் ஒரு நபர் இவர்! அதனால் பொய் என்றே எடுத்துக் கொள்ளுகிறோம்!
எத்தனை நாட்களுக்கு பின் மறுக்கிறாய் மகனே. எல்லா ஆதரங்களையும் வெற்றிகரமாக மறைதட்பின் அல்லது எப்படியெல்லாம் பொய் சொல்வது என கலந்து ஆலோசித்தபின் இப்பொழுது தான் பேசுகிறாய். முன்பெல்லாம் சம்பந்தம் இல்லாததுக்கெல்லாம் தாண்டி குதிப்பை. இப்ப எனையா இவ்வளவு தாமதம்?