உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சூதாட்ட மன்னர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தேசிய பாதுகாப்புத் திட்டங்கள் பற்றி விவரிக்க மறுத்தார்.
அவை “மிக இரகசியமானவை”. அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டவை என்றாரவர்.
“பால் புவா தேசியப் பாதுகாப்பில் அரசாங்கத்துக்கு உதவினார் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். எப்படி என்பதை வெளியிட முடியாது. அது பாதுகாப்பு விவகாரங்கள் சம்பந்தப்பட்டது. அவை ‘மிக இரகசியாமானவை’ என்பதால் பொதுவில் தெரிவிக்க இயலாது”, என்றார்.
சூதாட்ட மன்னனுடன் தேசிய பாதுகாப்பு திட்டமா??? நாட்டின் இரகசியமா??? சொல்வதோ! உள்துறை அமைச்சர். அப்பப்பா!!!! நாடு நன்றாகவே முன்னேறிக்கொண்டிருக்கிறது.. எதிர்காலம் சூப்பர்!!!!
சிரிக்கிறது நமது அரசியல் ….வாருங்கள் எல்லோரும் இந்த “அமைச்சரின் ” பதிலை கேட்டு சிரிப்போம் ……இதுதான் இப்பொழுது நாம் செய்யகுடியது
ஆமாம் உண்மைதான், யாவும் மலேசிய அரசாங்கத்திற்கு ‘மிகவும் இரகசியமானவை’, அல்தாந்துயா படுகொலை உட்பட !!!