முகைதின்: பள்ளிகள் சொந்த சட்டங்களைக் கொண்டிருக்கக் கூடாது

muhபள்ளிகள்  கல்வி  அமைச்சின்  ஒப்புதலைப்  பெற்றிராத  சட்டங்களை  அமல்படுத்தக் கூடாது  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறினார்.

செராசில்  மூன்றாம் படிவம்  பயிலும்  முஸ்லிம்-அல்லாத  மாணவி  ஒருவர், ‘பாஜூ குரோங்’  அணிந்திருந்ததால்  பள்ளிக்குள்  நுழைய  தடைவிதிக்கப்பட்ட  சம்பவம்  பற்றி  வினவியதற்கு  அவர்  இவ்வாறு  பதிலளித்தார்.

‘பாஜு  குரோங்’கை  முஸ்லிம்  மாணவிகள்  மட்டுமே  அணியலாம்   என்று  அம்மாணவியிடம்  தெரிவிக்கப்பட்டதாக  அவரின்  தந்தை  கூறினார்.

“முஸ்லிம்-அல்லாத  மாணவிகள்  பாஜு  குரோங்  அணிவதைத்   தடை  செய்யும்  உத்தரவு  எதையும்  அமைச்சு  வெளியிட்டது  இல்லை.

“பள்ளிகள்  அமைச்சின்  ஒப்புதலின்றி இதுபோன்ற  விதிகளை  அமல்படுத்தக்  கூடாது”, எனக்  கல்வி  அமைச்சருமான  முகைதின்  கூறினார்.

மாறாக,  பாஜு  குரோங்  தேசிய  உடை  என்பதால்  அதை  முஸ்லிம்-அல்லாதார்  அணிவதை  ஊக்குவிக்க  வேண்டும்  என்பதையும்  முகைதின்  வலியுறுத்தினார்.