அப்பாடா, ஒரு வழியாக அல்டான்துன்யாவின் கொலையாளிகளின் முகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மங்கோலியப் பெண்ணின் மரணம்தான் பெரும் மர்மமாக இருந்தது என்றால் கொலையாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இரு போலீஸ்காரர்களும் மர்ம மனிதர்களாக நீதிமன்றத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். வழக்கு தொடங்கியதிலிருந்து அவர்கள் ஊடகங்களுக்கு முகம் காட்டியதில்லை.
இப்போது முன்னாள் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரின் உருவப் படங்கள் கிடைத்துள்ளன. புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு நன்றி.
ஆனாலும், அல்டான்துன்யா மரணத்தில் இன்னும் ஒரு மர்மம் நீடிக்கிறது. அவரைக் கொல்ல வேண்டிய நோக்கம் என்ன? இதற்கு இதுவரை விடை இல்லை.
இப்பொழுது இன்னொரு பிரச்சனை உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருவருக்கு மரண தண்டனை கொடுப்பதாக இருந்தால் அவரை அந்த நாட்டு அரசாங்கம் இங்கு அனுப்ப முடியாதாம்.
அவரை கொல்ல வேண்டும் என்பது அல்ல. எல்லாம் pelan பண்ணி செய்வது போல் உள்ளது. இப்பொழுதாவது அவர்கள் வாயை திறந்தால் நல்லது……
இவங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளுவு சலுகை. இப்பொழுதுதான் இந்தப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. கோழி திருடியவன் செருப்பு திருடியவன் படங்களெல்லாம் உடனே வெளியிடப் படுகின்றன. பட்சி என்னமோ சொல்ல வருது……
இவங்க High profile கிரிமினல்ஸ்,எனவே விசேஷ சலுகைகள் உண்டு!!!
அல்தாந்துயா இந்நாட்டிற்குள் வந்ததற்கான ஆதாரங்கள், அதாவது அல்தாந்துயா கடப்பிதழில் இந்நாட்டிற்குள் வந்ததற்கான மலேசிய குடிநுழைவு முத்திரை எதுவும் இல்லையாம். ஆகையால் இந்த முன்னாள் காவல் துறையினர் தைரியமாக இப்படுகொலையை செய்திருக்கிறார்கள்.
அப்படியானால், சமீபத்தில் நாட்டில் நடைபெறும் கள்ளக்குடியேறிகள்
கொலைகளுக்கும் நமது காவல் துறையினருக்கும் சம்பந்தம் உள்ளதா ? என்ற கேள்வியும் எழுகிறது.
மலேசிய அரசாங்கம் காவல் துறையினருக்கு வெளிநாட்டினரை கொலை செய்ய பயிற்சி ஏதும் அளிக்கிறதோ ? என்ற அச்ச உணர்வு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் மேலோங்கி இருப்பதாக தெரிகிறது.
வடிவேலு ஆடு திருடிய கதையாயிருக்கு.கூட்டதை கலைக்கிறப்பாடு எனகில்ல தெரியும்.
யாரு சந்திகிறது
அல்டாண்டூயா கொலை செய்யப்பட்ட விதம் எந்த நாட்டிலும் நடந்திராத கொடூரமான செயல் அது. அந்த கொலைக்குப்பின்னால் இன்னும் பல மர்மங்கள் ஒளிந்துகொண்டிருப்பதுபோல் தெரிகிறது.பண முடிப்புக்கள்தான் அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க தடையாக இருப்பது போல் தெரிகிறது. எல்லாம் அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்.