சந்திரன் மரணத்தில் போலீசார் சட்டப்படி நடக்கவில்லை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

chandranகோலாலும்பூர்  கொரோனர்   நீதிமன்றம், போலீசார்  தடுப்புக் கைதி  பி.சந்திரனுக்கு  மருந்துகளைக்  கொடுக்காமலும்  மருத்துவ  சிகிச்சைக்கு  ஏற்பாடு  செய்யாமலும்  சட்டத்துக்குப்  புறம்பாக  நடந்து  கொண்டிருக்கிறார்கள்  எனத்  தீர்ப்பு  வழங்கியுள்ளது.

கொரோனராக  அதாவது மரண  விசாரணை  அதிகாரியாக  செயல்பட்ட  செஷன்ஸ்  நீதிமன்ற  நீதிபதி  அஹமட்  பாச்சீ,  சந்திரன்  2012,  செப்டம்பர் 10-இல்  காலை  மணி 7.48க்கு  முன்னதாக இறந்தார்  என்றும்  ஆனால், போலீசார்  12 மணி  நேரம்  கழித்துத்தான்  அவர்  லாக்-அப்பில்  இறந்ததைக்  கண்டறிந்து  புகார் பதிவு  செய்திருக்கிறார்கள்  என்றும்  கூறினார்.

“அவர்  இருதய  நோயின்  காரணமாக  இறந்தார். போலீசார்  அவருக்கு உரிய  மருந்தைக்  கொடுக்காதது  அல்லது  அம்மருந்தை  அவர்  உட்கொள்ள  அனுமதிக்காததுதான்  இறப்புக்குக்  காரணாமாகும்”, என்று  நீதிபதி  கூறினார்.

சிம்பாங்  ரெங்காமைச்  சேர்ந்த  சந்திரன்,  நான்கு-நாள்  லாக்-அப்பில்  வைக்கப்பட்டிருந்தபோது  இறந்தார். அவர்  லாக்-அப்பில்  இருந்த  காலத்தில்  அவரது  குடும்பத்தார் சந்திரனுக்குத்  தேவையான  மருந்துகளைக்  கொண்டு வந்து  தந்தனர்.  ஆனால்,  எந்த  மருந்தும்  அவருக்குக்  கொடுக்கப்படவில்லை.