ரோஸ்மாவின் அணைப்பு ஒரு ‘தாயின் அரவணைப்பு’

syedபிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்,   தேசிய  பூப்பந்து  வீரர்  லீ  சொங்  வெய்  உள்பட  பல பிரபலமானவர்களைக் கட்டிப்பிடித்த  சம்பவங்களைச்  சமய  அதிகாரிகள்  விசாரிக்க  வேண்டும்  என்ற  கோரிக்கைகளுக்கு  எதிராக அம்னோ  தலைவர்  ஒருவர்  ரோஸ்மாவைத்  தற்காத்துப்  பேசினார்.

ரோஸ்மா  பிரபலமானவர்களுடன் இருப்பதைக்  காண்பிக்கும்  படங்கள்  சமூக  வலைத்தளங்களில்  பதிவேற்றப்பட்டு  கூட்டரசுப்  பிரதேச  இஸ்லாமிய  விவகாரத்  துறை (ஜாவி) இரட்டை  நியாயத்தைக்  கடைப்பிடிப்பதாவும்  குற்றம்  சாட்டப்பட்டது.

K-pop  கலைஞர்களைக்  கட்டிப்பிடித்த  முஸ்லிம்  பதின்ம  வயதினர்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  என  ஜாவி  அறிவித்ததை  அடுத்து  எதிர்வினைகள்  இப்படிக்  கிளம்பியுள்ளன.

செராஸ்  அம்னோ  தலைவர்  சைட்  அலி, ரோஸ்மா  பெட்மிண்டன்  வீரரைக்  கட்டி  அணைத்ததை  ஒரு ‘தாயின்  அரவணைப்பாக’த்தான்  பார்க்க  வேண்டும்  என்றார்.

“ரோஸ்மா, நாட்டின்  முதல்நிலை  பூப்பந்து  ஆட்டக்காரரைக்  கட்டி  அணைத்ததை  ஒரு  தாய்,  விளையாட்டில்  சிறந்து  விளங்கும்  தம்  பிள்ளையைப்  பாராட்டுவதாகத்தான்  நான்  நினைக்கிறேன்.

“அதை  துடோங்-அணிந்த  பெண்கள்  கே-பொப்  கலைஞர்களைக்  கட்டிப்பிடித்த  சம்பவத்துடன்  ஒப்பிடக்கூடாது”, என்று  சைட்  அலி  தம்  வலைப்பதிவில்  கூறினார்.