சிருலால் ஒரு தர்மசங்கடமான நிலை

austசிருல்  அஸ்ஹார்  உமர்  விவகாரம்  மலேசியாவுக்கும்  ஆஸ்திரேலியாவுக்குமிடையில்  ஒரு  தர்மசங்கடமான  நிலையை  உருவாக்கியிருப்பதாகக்  கூறுகிறார்  அரச  வழக்குரைஞர்  மார்க் ட்ரோவல்.

இரு  நாடுகளும்  நல்லுறவைக்  கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலிய  சட்டம்  மரண  தண்டனை  விதிக்கப்பட்ட  ஒருவரை அவரது  தாய்நாட்டுக்குத்  திருப்பி  அனுப்புவதைத்  தடுக்கிறது.

“மலேசியா  அவரைத்  தூக்கில்  போடுவதில்லை  என்று  உத்தரவாதம்  அளித்தாலொழிய  அவரை  நாங்கள்  திருப்பி  அனுப்ப  மாட்டோம். அவருக்கு ஆயுள்  தண்டனை  கொடுத்தால்கூட  போதும்.

“அப்படிப்பட்ட  நிலையில்  அவரை  மலேசியாவுக்குத்  திருப்பி  அனுப்புவதற்குத்  தடை  இருக்காது”, என்றவர்  மலேசியாகினிக்கு  அனுப்பிய  மின்னஞ்சலில்  தெரிவித்தார்.