ஹிஷாம் ரயிஸ் சிறை செல்லும் சாத்தியம் இருக்கவே செய்கிறது

hishamதேச  நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  சமூக  ஆர்வலர்  ஹிஷாமுடின்  ரயிஸ்,  தாம்  சிறைக்கு  அனுப்பப்படுவதைத்தான்  பெரிதும்  எதிர்பார்த்தார். அதற்கு மாறாக, நீதிமன்றம்  அபராதம் மட்டுமே  விதித்து அவரை  விடுவித்தது.

ஆனால், அந்த  விடுதலை  நீண்ட  காலம்  நிலைக்காதுபோல்  தெரிகிறது. அரசு  தரப்பு  கடுமையான  தண்டனை  தேவை  என்று  மேல்முறையீடு  செய்கிறதாம்.

இதைத்  தம்  வழக்குரைஞர் ஷியாரெட்சான் ஜொகான்  தெரிவித்தார்  என  ஹிஷாமுடின்  அவரது  வலைப்பதிவில்  குறிப்பிட்டிருந்தார்.

“எனக்கு ரிம5,000 அபராதம்  விதித்தது  போதாது  என  அரசுத் தரப்பு  நினைக்கிறது”, என்றாரவர்.

நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்குமுன்  செய்தியாளர்களிடம்  பேசிய  ஹிஷாமுடின்,    பிஎன் அரசைக்  கவிழ்க்க  மக்கள்  தெருக்களில்  இறங்கி  ஆர்ப்பாட்டம்  செய்ய  வேண்டும்  என்று  தாம்  கேட்டுக்கொள்ளும்  காணொளி   கடந்த  ஆண்டு  அம்னோ  பேரவைக்  கூட்டத்தில்  திரையிடப்பட்டது  என்பதால்  தமக்குச்  சிறைத்  தண்டனை  கிடைப்பது  நிச்சயம்  என்று  கூறியிருந்தார்.