1எம்டிபி பிஏசி-யுடன் கலந்துரையாடுவதே மேல்

pua1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன (1எம்டிபி)த்  தலைவர்  அருள்  கந்தா கந்தசாமி, தம்முடன்   கலந்துரையாட  முன்வந்ததை  வரவேற்ற பெட்டாலிங் ஜெயா  எம்பி  டோனி  புவா,  அவர்  பொதுக்  கணக்குக்  குழு(பிஏசி)வுடன்  உரையாடுவதே  மேலானது  என்றார்.

“1எம்டிபி-யுடனான  கலந்துரையாடலை ‘அரசியல்  நோக்கில்’ திசை  திருப்பினேன்,  சாதகமாகப்  பயன்படுத்திக்  கொண்டேன்  என்ற  குற்றச்சாட்டுகள்  எழுவதைத்  தவிர்க்க, அருள்  பிஏசி-யுடன்  உரையாடுவதே  நல்லது.

“பிஏசி-இல்  ஏழு  பிஎன்  பிரதிநிதிகளும்  ஐந்து பக்கத்தான்  ரக்யாட்  பிரதிநிதிகளும்  உள்ளனர். அது  அரசியல்  ரீதியில்  1எம்டிபிக்கு  எதிராக  செயல்படுவதாகக்  குற்றச்சாட்டு  எழாது”, என்று  புவா  கூறினார்.